தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் விளக்கு பகுதியில் தனியார் ஹோட்டலில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்தில் இருந்து 40 சவரன் தங்க நகைகள் திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை.!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கரிசல்குளம் விளக்கு பகுதியில் தனியார் ஹோட்டலில் நிறுத்தப்பட்ட ஆம்னி பேருந்தில் இருந்து 40 சவரன் தங்க நகைகள் திருடு போனது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த ஜெஸ்டின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பேருந்தை ஹோட்டலில் நிறுத்திய போது இயற்கை உபாதை கழிக்க கீழே இறங்கி உள்ளனர். அதன் பின்னர் மீண்டும் பேருந்தில் சென்று பார்த்தபோது அவர்களது உடைமைகள் மற்றும் பையில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகைகள் ஆகியவை காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போல் தன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற போலீசார் சக பயணிகளிடம் சோதனை நடத்தியதில் பேக் கிடைக்காததால் பேருந்தை விடுவித்துள்ளனர்.கடந்த ஆண்டும் பேருந்து அதே ஹோட்டலில் நிறுத்திய போது இதே போன்ற சம்பவம் நடந்ததை நினைவு கொண்டு போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
