யோகா போட்டியில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவி சாதனை!
தென் மண்டல சாம்பியன்ஷிப்–2026 யோகா போட்டியில் முதல் பரிசு வென்றார் 6-ம் வகுப்பு மாணவி ரா. ஜெனனி
தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23.08.2026 அன்று நடைபெற்ற தென் மண்டல சாம்பியன்ஷிப்–2026 யோகா போட்டியில், தூத்துக்குடி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ரா. ஜெனனி முதல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.
பூபாலராயர்புரம் பகுதியைச் சேர்ந்த திரு. கு. ராஜ்குமார், (தலைவர், தூத்துக்குடி ஹார்பர் ஒர்க்கர்ஸ் யூனியன் - ஏஐடியுசி) அவர்களின் மகளான ஜெனனி, யோகா போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவி ரா. ஜெனனியின் இந்த சாதனைக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மாணவியின் சாதனைகள் மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துகள்!...
