தங்கத்தேர் மாதா கெபியின் 44ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

 

தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-வது ஆண்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.  திருவிழாவின் தொடக்க நிகழ்வாக 

நடைபெற்ற இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் லூர்த்தம்மாள்புரம் தூர்ந்து அன்னை பேராலய பங்கு மக்கள், இறைமக்கள், அன்பிய மக்கள் உள்ப்பட இப்பகுதியை சுற்றிவாழும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்வை சிறப்பு செய்தனர்.

மேலும், கொடியேற்ற நிகழ்வை தொடர்ந்து தினமும் ஜெபமாலை மற்றும் சிறப்பு பிரார்த்தனை

44-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வரும் நாட்களில் தினந்தோறும் மாலை நேரங்களில் நடைபெற உள்ளன. இறைமக்கள்  மற்றும் பொதுமக்கள் என சாதி மத பாகுபாடின்றி  அனைவரும் குடும்பத்துடன் திருவிழாவில்  கலந்து கொண்டு வழிபாடு செய்யும் வகையில் விழா ஏற்பாடுகளை தங்கத்தேர் கெபி கமிட்டியினர்  செய்து வருகின்றனர்.

சர்வ மதத்தினரும் கலந்து கொள்வதால் இத்திருவிழா சமத்துவ திருவிழாவாக அழைக்கப்படுகிறது.

இந்த  திருவிழாவின் சிறப்பம்சமாக, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பது என்பது தான் குறிப்பிடத்தக்கது. மேலும் சாதி மத வேறுபாடுகளை களைந்து ஓரணியில் ஒன்றிணைந்து இத்திருவிழா வை முன்னெடுப்பதால் சாதி மத நல்லிணக்கத்திற்கு இத்திருவிழா ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வருகிற 06-09-2026 அன்று சப்பர பவனி நடைபெற உள்ளது. இதில் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் திருவுருவம் சிறப்பு அலங்காரத்துடன் பவனியாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ். மாணிக்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தி நிறைந்த சூழலில் நடைபெறும் இந்த பவனிக்கான ஏற்பாடுகளும் தங்கத்தேர் மாதா  கெபி கமிட்டி சிறப்பாக செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 7-ம் தேதி 5000 நபர்கள் கலந்து கொள்ளும் ஆசன விருந்து

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக 07-09-2026 அன்று ஆசன விருந்து நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்மிக விழாக்கள் வழிபாட்டுடன் மட்டுமல்லாமல் சமூக ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வளர்க்கும் நிகழ்வுகளாக இத்திருவிழா அமைந்துள்ளது. அந்த வகையில், அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நடைபெறும் ஆசன விருந்து நிகழ்ச்சியும் திருவிழாவின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்நிகழ்வில் சுமார் 5000 நபர்களுக்கும் மேல் கொள்வதாக தகவல்.

செப்டம்பர் 8-ம் தேதி ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலி..

44-வது ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வில் ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலியாக 08-09-2026 அன்று நடைபெற உள்ளது. லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்திரு. செல்வன் பெர்னான்டோ தலைமையில் இந்த சிறப்பு கூட்டு திருப்பலி வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட உள்ளனர். திருவிழாவின் உச்ச நிகழ்வாக நடைபெறும் இந்த கூட்டு திருப்பலிக்காக சிறப்பு ஏற்பாடுகளை தங்கத்தேர் மாதா கெபி கமிட்டியினரால் செய்யப்பட்டு வருகிறது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான திருவிழா

எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் நடைபெறும் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபி திருவிழா, ஆன்மிக நிகழ்வாக மட்டுமின்றி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விழாவாகவும் ஆண்டுதோறும்  தொடர்ந்து  நடந்து வருகிறது. அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து விழாவில் பங்கேற்பது அப்பகுதியின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த திருவிழா, தற்போது 44-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள விழா, சப்பர பவனி, ஆசன விருந்து மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த 44-வது ஆண்டு திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தங்கத்தேர் கெபி கமிட்டியினர், வேளாங்கண்ணி மாதா அன்பிய மக்கள் மற்றும் பூண்டி மாதா அன்பிய மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

பக்தர்கள் அனைவரும் எந்தவித சிரமமும் இன்றி விழாவில் கலந்து கொள்ளும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 44-வது ஆண்டு திருவிழா, வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் முக்கிய கூட்டு திருப்பலியுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!