தூத்துக்குடி கல்லூரியில் சர்வதேச இளைஞர் தினம்.!
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியின் தன்னாட்சி சார்பில் சர்வதேச இளைஞர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜெசி பெர்னாண்டோ சிறப்புரையாற்றினார். "இளைஞர்களே உலகின் நம்பிக்கை" எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, நிலையான வளர்ச்சி இலக்குகளான தரமான கல்வி மற்றும் அமைதி, நீதி, வலுவான நிறுவனங்களை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.
விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர் சிபானா, துணை முதல்வர் முனைவர் எழிலரசி மற்றும் எஸ்.எஸ்.சி இயக்குநர் முனைவர் ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். திரளான மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களான முனைவர் மரியசாந்தி, லூகாஸ் ரெக்சலின், மரிய சுமதி மரிய ஹார்டினா அட்லின் வாஸ் மற்றும் முனைவர் திபுர்டியுஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
