"அதிமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலம்" முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பேச்சு.!!.

 

தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 18வது வாா்டுக்குட்பட்ட ராஜகோபால்நகா், நிகிலேசன்நகா், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச்செயலாளரும் வட்டச்செயலாளருமான முருகன் தலைமை வகித்தாா். முத்தாரம்மன் கோவிலில் சாமி தாிசனம் செய்து முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் 

அதிமுகவை உருவாக்கி மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் கட்சியை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தி அனைவருக்குமான ஆட்சியை வழங்கினாா். அதே வழியில் ஜெயலலிதா உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகாித்து நல்லாட்சி நடத்தி நாட்டுமக்களுக்கான திட்டங்களான மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம் என வரலாற்று சாதனையை செய்தாா். அவரது மறைவிற்கு பின் 3ம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி அதிமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றினாா். தூத்துக்குடி தொகுதியில் அதிமுக செய்த சாதனைகள் ஏராளம் குறிப்பாக இந்த பகுதியில் குடிநீர் தட்டுபாடு இல்லாமல் இருப்பதற்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இருந்த காலத்தில் 282 கோடி மதிப்பில் நான்காவது பைப்லைன் திட்டம் செயல்படுத்தியது தான் காரணம் அதை நினைத்து பாா்க்க வேண்டும் வரும் தோ்தல் வாக்குறுதியாக ஆண்களுக்கும் கட்டணம் இல்லாத பேருந்து அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டம் குடும்ப அட்டை தாரா்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டா் 100 நாட்கள் வேலை நாட்கள் 150 நாட்களாக உயா்வு ஓவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலன்று பொங்கல் தொகுப்புடன் 1000 வழங்கப்படும் என்று சிறப்பான தோ்தல்அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வௌியிட்டுள்ளாா். தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களித்து மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைவதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் அதிமுக ஆட்சி தான் தமிழகத்தின் பொற்காலம் என்று பேசினாா்.  பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆர்் ஜெயலலிதா போல் வேடமணிந்து வாக்குகள் சேகாித்தனா். 

பிரச்சாரத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் மில்லை ராஜா, மாவட்ட அணி செயலாளர்கள் நடராஜன், துரைசிங், பகுதி செயலாளர் முருகன்,  இலக்கிய அணி இணைச்செயலாளர் பொற்கிளி ஜான்சன் தேவராஜ், தலைமை பேச்சாளா் ராஜசேகா், வக்கீல ஆறுமுகநயினாா், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியா்ராஜ், வட்டச்செயலாளர் அருண்குமாா் நிா்வாகிகள் முருகன் இசக்கிராஜா பரமசிவம், ராஜேஷ், சிவபெருமாள், பேச்சுமுத்து, போக்குவரத்து நிா்வாகிகள் பேச்சியப்பன், டெரன்ஸ், சண்முகராஜ், சகாயராஜ், உள்பட மகளிா் அணி மற்றும்  கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் கலந்து கொண்டனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி