சாத்தான்குளம் வழக்கு : "ஆயுள் தண்டனை அச்சம் தராது ,9 பேருக்கும் மரண தண்டனை.!" - நீதிமன்றம் அதிரடி

 

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் மார்ச் 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் இந்த வழக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி சாத்தான் குளம் வழக்கானது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த தீர்ப்பில்,`` தந்தையையும், மகனையும் ஒருவர் முன் ஒருவர் நிர்வாணப்படுத்தி, மனம்போனபோக்கில் தாக்கியிருக்கின்றனர். சம்பவத்தைப் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது. காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அச்சம் தராது. மரண தண்டனை விதிப்பதே சிறந்தது" எனக் கூறப்பட்டிருக்கிறது.

காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதித்தால் , நீதிமன்றம் என்ன செய்யும் ஆயுள் தண்டனை தானே விதிக்கும் என ஏளனமாக நினைப்பார்கள். அச்சம் என்பது உண்மையான அச்சமாக இருக்க வேண்டும். ஆயுள் தண்டனை விதிப்பது போதுமானதாக இருக்காது என இந்த நீதிமன்றம் கருதுகிறது." என்றார்.

அதன் அடிப்படையில் முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையும், ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.


இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே...விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான அபராதம் மட்டும் வேறுபாடு உள்ளது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி