"தூத்துக்குடியில் எப்போதும் பார்க்காத அளவுக்கு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்" - தூத்துக்குடியில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

தூத்துக்குடி மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் சங்கரபோி விலக்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் தலைமை வகித்தாா். கனிமொழி எம்.பி வரவேற்புரையாற்றினாா். வேட்பாளா்களான தெற்கு மாவட்டதிமுக செயலாளரும் மீன்வளம் மீனவா்நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், மாா்க்கன்டேயன் எம்எல்ஏ கருணாநிதி ஊா்வசி அமிா்தராஜ் ராமஜெயம் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதாித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் பேசுகையில்:-

முத்துநகருக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வந்து இருக்கிறேன். மீன்வளமும், துறைமுகமும் வணிகமும் செழிக்க கூடிய தூத்துக்குடிக்கு வந்து உள்ளேன். தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய் இங்கு ஸ்பெஷலானது. அந்த இரண்டு இனிப்பு போன்று, இந்த மாவட்ட மக்கள் இனிமையானவர்கள். ஸ்வீட் மட்டுமா தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்கிறீர்கள். உப்பும் நீங்கள்தான் சப்ளை செய்கிறீர்கள். தனது சொத்துக்கள் அனைத்தும் விற்று ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய கப்பலோட்டிய வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், நல்லகண்ணு உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை, தியாகிகளை தமிழகத்துக்கு தந்த மண் தூத்துக்குடி. தி.மு.க.வுக்கு கே.வி.கே.சாமி, முரட்டு பக்தர் என்று கலைஞரால் அழைக்கப்பட்ட என்.பெரியசாமி உள்ளிட்ட பல கழக தீரர்களை தந்த மண்.


கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடிக்கு எத்தனை முறை வந்து உள்ளேன் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். எனக்கே மலைப்பாக இருந்தது. எத்தனை அரசு விழாக்கள், எத்தனை தொழிற்சாலைகள் தொடக்க விழா, புதுமைப்பெண் திட்டம் தொடக்க விழா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, தூத்துக்குடிக்கு ஓடோடி வந்து பார்த்தேன். 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் கூடுதல் அதிகாரிகளை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டேன். மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில், தமிழக அரசு சார்பில் ரூ.666 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை நேரில் வந்து வழங்கினேன். வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கினோம். தூத்துக்குடி எப்போதும் பார்க்காத அளவுக்கு அதிக திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம். அதற்கு முக்கிய காரணம் கனிமொழி எம்.பி. அவர் உங்கள் எம்.பியாக இருப்பதால், என்னிடம் பேசி பல்வேறு திட்டங்களை வாங்கி விடுகிறார். அதிகாரிகளிடம், அவரது பெயருக்கு ஏற்றபடி கனிவோடு பேசி எல்லா வேலைகளையும் வாங்கி விடுவார். நாடாளுமன்றம், கழக பணியில் ஏதேனும் சிறிது நேரம் கிடைத்தால் அவர் தூத்துக்குடிக்கு கிளம்வி வந்து விடுவார். இப்படி பணி செய்ததால் தான் பின்தங்கி இருந்த மாவட்டமாக இருந்த தூத்துக்குடி வேகமாக முன்னேறி தென்மாவட்டத்தில் முக்கிய மாவட்டமாக வந்து உள்ளது. ஒருகாலத்தில் பின்தங்கிய மாவட்டமாக இருந்த தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் அதனை உடைத்து முன்னேற தொடங்கி உள்ளது என்று பத்திரிகையில் எழுதி இருந்தனர். அந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது. நான் உங்களிடம் ஆதரவு கேட்க சும்மா வரவில்லை. இந்த மாவட்டத்துக்கு தென்தமிழகத்தின் முதல் டைடல் பூங்கா தந்து உள்ளோம். சில்லாநத்தத்தில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 18 மாதங்களில் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்கி உள்ளது. இதனால் தமிழகத்தின் மின்சார வாகன தலைநகரமாக தூத்துக்குடி மாறி உள்ளது.

தூத்துக்குடியில் உயர் பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரி கட்டிடம், திருச்செந்தூரில் மகப்பேறு, விபத்து அவசர சிகிச்சை கட்டிடம், குரூஸ்பர்னாந்து உருவச்சிலை, கி.ரா மணிமண்டபம், வீரமாமுனிவர் மணிமண்டபம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெருந்திட்ட வளாகம் புணரமைப்பு பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்தி உள்ளோம். வாகைகுளத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு இரவு நேர விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை, கோவையில் நடத்துவார்கள். நம் ஆட்சியில் முதன் முதலில் தூத்துக்குடியில் நடத்தினோம். இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏரல், சாயர்புரம் பஸ் நிலையம், ஓட்டப்பிடரம் அரசு கல்லூரி, கடற்கரை கிராமங்கிளல் தூண்டில் வளைவு, மீன்பிடி இறங்குதளம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம், முக்கானி-பழையகாயல் கூட்டு குடிநீர் திட்டம், பேட்மாநகரில் மினிஸ்டேடியம், கோவில்பட்டி அரச ஆஸ்பத்திரியில் புதிய மகப்பேறு கட்டிடம், உடன்குடியில் புதிய அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு மின்சார உற்பத்தி தொடங்கி உள்ளது. பர்னிச்சர் பூங்கா, வேம்பார் பனைபொருள் குறுங்குழும கட்டிடம் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.


தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத நிலையை உருவாக்கி உள்ளோம். தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி செலவில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் கப்பல்கட்டும் தளம், விண்வெளி பூங்கா, அல்லிகுளத்தில் புதிய சிப்காட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தருவைகுளத்தில் தூண்டில் வளைவு, புதியம்புத்தூர் ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்துக்கு நல்லகண்ணு பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

தூத்துக்குடிக்கு ஸ்டாலின் போன்று யாரும் இவ்வளவு கவனம், முக்கியத்துவம் கொடுத்து இருக்க மாட்டார்கள். ஐ.டி, தொழில் நிறுவனம், விளையாட்டு துறை, துறைமுக வளர்ச்சி என்று சாதனைகளை நினைவில் வைத்து இருக்கும் காலத்தில், வேதனைகளை நினைவில் வைத்து இருக்கும் நிலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டம், ஒழுங்கு பற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துறையை கையில் வைத்து கொண்டு துப்பாக்கி சூடு சம்பவத்தை டி.வியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறினார். அவர் சொன்ன பொய்கள் எல்லாம், நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணையில் அம்பலமாகி விட்டது. தலைமை செயலாளர், டி.ஜி.பி, உளவுத்துறை ஐ.ஜி உள்ளிட்டோர் நிமிடத்துக்கு நிமிடம் பழனிசாமியை தொடர்பு கொண்டு கொண்டே இருந்தனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப பணிநியமன ஆணை, ரூ.5 லட்சம் கூடுதல் உதவித் தொகை வழங்கினோம். இதனை மறைத்து விட்டு யோக்கியர் போன்று எடப்பாடி பழனிசாமி ஊர், ஊராக சென்று கண்டதையும் வாந்தி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.  

அவர் கொஞ்சம் கூட மனசாட்சியோ, நேர்மையோ இல்லாதவர் என்பதற்கு மற்றொரு சாட்சிதான் சாத்தான்குளம், தந்தை, மகன் கொல்லப்பட்ட கொடூரம். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பழனிசாமி, அந்த கொலையை மறைக்கப் பார்த்தார். இது லாக்கப் மரணம் என்று பொய் சொன்னார்கள். இதையெல்லாம் மக்களிடம் மறைக்க, மறக்க செய்வதற்காக என்மீதும், தனிநபர் தாக்குதல் நடத்தி வருகிறார். இதனால் அவரது அலங்கோல ஆட்சி மறைந்து விடுமா. அவரது தராதரம் சந்தி சிரிக்கிறது. முதல்-அமைச்சராக இருந்தவர் பேசுவது போன்றா பேசுகிறார். சாமானிய மக்கள் கூட முகம் சுழிக்கிறார்கள். சசிகலா காலை பிடித்து முதல்-அமைச்சர் ஆனார். டெல்லியின் காலை பிடித்து ஆட்சியை நடத்தினார். நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் என்பது போல, அவர் ஆட்சி செய்த காலத்தில் தமிழகத்தின் மாநில உரிமைகள் காணாமல் போனது. தற்போது புதுடெக்னிக்காக டெல்லிக்கு ஒத்து போகும் ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்துக்கு திட்டங்கள் கிடைக்கும் என்று கூறுகிறார். மாநில அரசுடன் 4 ஆண்டுகள் சமரசம் செய்து கொண்டு தானே ஆட்சி செய்தீர்கள். அப்போது என்ன திட்டங்கள் கொண்டு வந்தீர்கள். அப்போது எந்த நிதியும் பெறவில்லையே. நீட் விலக்கு கிடைக்க வில்லையே. யார் ஆட்சி செய்தாலும் மத்திய பா.ஜனதா அரசு நிதி ஒதுக்காது. ஏனென்றால் தமிழ், தமிழ்நாடு, தமிழ் கலாசாரம் என்றால் அவர்களுக்கு வெறுப்பு. தமிழ் பண்பாடு கிடையாது. எல்லாம் பாரத கலாசாரம் என்று பேசுகிறவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். 

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்த போது தமிழகத்துக்கு பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசு திட்டத்தில் 11 சதவீதம் திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்தோம். 69 திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றோம். தேசிய நெடுஞ்சாலைகள் எங்கள் கூட்டணி ஆட்சியில் போடப்பட்டது. திருச்சி, கோவை, மதுரை விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், சரக்கு பெட்டக முனையம், சேலம் உருக்காலை, சென்னை அருகே தேசிய கடற்சார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், நெசவுத் தொழிலுக்கு சென்வாட் வரிநீக்கம், ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், பொடா சட்டம் ரத்து போன்ற பலதிட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் எங்கள் கூட்டணி ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் இருந்து இருந்தால் சென்னை மெட்ரோவை நிராகரித்து இருப்பார்கள். நல்ல வேளை சென்னை தப்பியது. மத்திய பா.ஜனதா ஆட்சியில் இருந்து நீங்கள் சாதித்தது என்ன, சாதிக்க போவது என்ன, முடிந்தால் சொல்லுங்கள். நீட் விலக்கு தருவோம், மும்மொழி திட்டம் கிடையாது, தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முடியுமா, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை, பொது சிவில் சட்டம், வக்பு திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வைக்க முடியுமா. கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட எப்.சி.ஆர்.ஐ சட்டத்தை வாபஸ் பெற வைக்க முடியுமா. இதைப்பற்றி உங்கள் டெல்லி ஓனரை மேடையில் வைத்து பேச முடியுமா.

பா.ஜனதாவுடன் இருக்கும் வரை வெறும் தலையாட்டி பொம்மையாக, ரப்பர் ஸ்டாம்பாகத்தான் இருக்க முடியும். அதனால் உங்களால் ஜெயிக்க முடியாத வீண் சவால்களை நிறுத்துங்கள். காலில் விழுந்தோமா, காலை வாரி விட்டோமா, அடுத்த காலை நோக்கி போவோமா. இவ்வளவுதான் பழனிசாமியின் வாழ்க்கை சுருக்கம். அவருடைய மொத்த அரசியல் வாழ்க்கையும் இந்த மூன்றில் அடங்கி விடும். அடிமை பழனிசாமியின் ஆட்சி வேண்டாம் என்று நீங்கள் முடிவெடுத்து 2021-ம் ஆண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தீர்கள். இதனால் மத்திய அரசின் வஞ்சனைகளை மீறி வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். 2026 தேர்தல் தமிழகத்தின் அடுத்த பாய்ச்சலுக்கு செயல்திட்டமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் அறிக்கை தான் சூப்பர்ஸ்டார். சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டால் என்று ஒரு பாடல் உண்டு. முதலில் இல்லத்ததரசி திட்டம் முதல் பாலிலேயே சிக்சரா. இதில் ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கப்படும். இதில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உங்களுக்குத்தான். நீங்கள் என்ன வாங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதனை வாங்கி கொள்ளலாம். 

1 கோடியே 30 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதனை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும். எல்லா உதவித்தொகையும் இரண்டு மடங்கு வழங்கப்பட உள்ளது. பெண்கள் முடிவு செய்து விட்டார்கள். இதனால் நம் வெற்றி யாருக்கும் எட்டாத அளவுக்கு செல்லப்போகிறது. தூத்துக்குடியில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு கப்பல் கட்டுமான தொழில்நுட்பம் சரக்கு மேலாண்மை பயிற்சி, செம்மண் தேரி நிலங்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். தென்மாவட்டம் கண்டு வரும் வளர்ச்சி தொடர, தமிழகத்தின் வளர்ச்சி தொடர, அரசியல் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடா, டெல்லியா என்ற ஜனநாயக போரில் தமிழ்நாடு அணிதான் வெல்ல வேண்டும். கப்பலோட்டி தமிழன் மண்ணில் டெல்லிக்கு கப்பம் கட்டுகிற அ.தி.மு.க. டெபாசிட் கூட வாங்கக்கூடாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனையை நாங்களே முறியடிக்கும் வகையில் ஆட்சி அமைப்போம். என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசினாா்.

 
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சண்முகம், தமிழக ஆட்சி கழக நிறுவனா் எஸ்ஆர் பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாநகர செயலாளர் தனலட்சுமி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் முத்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியார், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமதுஅசன், மூக்குலத்தோர் புலிப்படை மாவட்ட செயலாளர் மணி, தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் மைதீன்கனி, திராவிடர் கழக தலைவர் முனியசாமி, சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர். ஆதிதமிழா் கட்சி மாவட்ட தலைவர் சீதாலட்சுமி, தமிழா் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, திமுக துணைமேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன்,  மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், குபேர்இளம்பரிதி, முத்துராமன் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், நிக்கோலாஸ் மணி, பெனில்டஸ், கோகுல்நாத், அருண்குமார், ராமர், கணேஷ்குமாா், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபஸ்அமிர்தராஜ், ஆனந்தசேகர், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பரமசிவம், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், சாகுல்ஹமீது, ரவி, செல்வின், சங்கரநாராயணன், வக்கீல் நாகராஜன்பாபு, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், ராஜ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சுரேஷ், செல்வராஜ், மந்திரகுமார், பொன்பெருமாள், டென்சிங், மனோ, பாலகுருசாமி, சுரேஷ், பாலு, அல்பட், ரவி இளங்கோ, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமார், பத்மாவதி, கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், கண்ணன், வைதேகி, பவாணி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, ராஜதுரை, ஜான்சிராணி, பட்சிராஜ், ஜான், முத்துமாரி, வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், குமார், சுரேஷ்குமார், மதிமுக மாநக செயலாளர் முருகபூபதி, மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த அக்பா், மைதீன், நிா்மல்கிறிஸ்டோபா் ஐசன்சில்வா கோபால், மணி அல்பட், பிரபாகர், பேச்சிமுத்து, பாஸ்கர், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

பாக்ஸ்: அமைச்சா் கீதாஜீவனுக்கு புகழாரம் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக பணியாற்றி கலைஞாின் முரட்டு பக்தனாக இருந்து பணியாற்றிய பொியசாமியின் மகள் கீதாஜீவன் என்னால் பெண்சிங்கம் என்று அழைக்கப்பட்ட உங்கள் மண்ணில் ைமந்தன் மகள் தான் இங்கு போட்டியிடுகிறாா். என்று பல்வேறு வகையில் புகழாரம் சூட்டினாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி