ஆறு மணி நேரம் காக்க வைத்து சந்திக்க வந்தவர்களை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய அமைச்சர் கீர்த்தனா.

 

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டுதளம் அமைக்க கடந்த அரசு நடவடிக்கை எடுத்தது இதற்கு அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு முள்ளக்காடு. பழைய காயல். புல்லாவெளி உள்ளிட்ட நான்கு கிராமத்தில் உள்ள சுமார் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று பார்வையிட்டு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறினார் ஆனால் ஒரு மாத காலமாகியும் இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லாத சூழ்நிலையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை உப்பு உற்பத்தியாளர்கள் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சந்தித்து தங்களுடைய பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைக்கப்பட்டால் 15,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் வேறு இடத்தில் கப்பல் கட்டுதளத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள் நான் நேரில் வந்து பார்வையிட வருகிறேன் என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா உப்பு உற்பத்தியாளர்களிடம் கூறி இருந்தார், ஆனால் நேரில் இதுவரை வரவில்லை.

இந்நிலையில் சிவகாசியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்திக்க உட்பு உற்பத்தியாளர்கள் சென்றனர் அப்போது அமைச்சர் கீர்த்தனா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருங்கள் நான் வருகிறேன் என்று கூறியுள்ளார் இதனையடுத்து  அமைச்சர் கீர்த்தனாவை சந்திக்க சென்ற உப்பு உற்பத்தியாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காத்திருந்தனர் அமைச்சர் கீர்த்தனா வரவில்லை நாலு மணிக்கு பின்பு உதவியாளர் என்று ஒருவர் வந்து அமைச்சர் கீர்த்தனா பல்வேறு நிகழ்ச்சிகள் இருப்பதால் உங்களை சந்திக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டார் ஆறு மணி நேரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காத்திருந்த உட்பு உற்பத்தியாளர்கள் அமைச்சர் கீா்த்தனாவை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி