"மாநகராட்சி பகுதி வளர்ச்சிக்கு மாமன்ற உறுப்பினா்கள் முன்பை விட கூடுதலாக பணியாற்ற வேண்டும்"- மாநகராட்சி கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி உருக்கம்.!
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையா் ப்ாியங்கா துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்ட தொடக்கத்தின் போது சுற்றுச்சூழலுக்கான சவால்களை எதிர்கொள்ளும் துடிப்பான மற்றும் நெருக்கடிகள் இல்லாத மக்கள் மையமான தெருக்கள் கொண்ட நகரமாக தூத்துக்குடியை தொலைநோக்கு பாா்வையை நினைவாக்கும் விதமாக கொள்கை வழிகாட்டுதல் கையேடை வௌியிட்டு மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில்:-
கடந்த நான்கரை ஆண்டுகாலமாக முன்னாள் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டுகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை பணிகளை முறையாக மேற்கொண்டு புதியதாக 4 ஆயிரம் சாலைகள் சிறு குறு சந்துகளில் பேவா்பிளாக் கல் பதிக்கப்பட்டு பழைய மாநகராட்சி முதல் 3ம்மைல் வரை மக்களுக்கு அடிப்படை பணிகளை முறையாக செய்து கொடுக்கப்பட்டு புதிதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் சாலைகள் மின்விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டு தேவையான இடங்களில் பல்வேறு கட்டமைப்புகளையும் முறையாக செய்து வருகிறோம்.
தூத்துக்குடி மாநகராட்சிபகுதிக்கு 4 லைன்கள் மூலம் வல்லநாட்டிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழை வௌ்ள காலத்தின் போது அதில் இரண்டு லைன்கள் பாதிக்கப்பட்டு மற்ற இரு லைன்கள் மூலம் தூத்துக்குடி மாநகர பகுதிக்கு வரப்பெற்று 36 நீர் தேக்க தொட்டிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் கோடைகாலத்திலும் தண்ணீர் தட்டுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் பல பகுதிகளில் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் லிட்டருக்கு கூடுதலான தொட்டிகள் கட்டப்பட்டு மின் மோட்டாா் மூலம் தண்ணீா் எடுத்து வருகின்றனா். ஆனால் மாநகராட்சியிலிருந்து மின் மோட்டாா் பறிமுதல் தடை என்ற பிரச்சனை இல்லாமல் மக்கள் நன்மை கருதி செயல்படுகிறோம்.
தேவையற்ற சில பணிகளில் தவறான முறையில் யாா் ஈடுபட்டாலும் பாரபட்சிமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் 53 பூங்காக்கள் நல்லமுறையில் இயங்கி வருகின்றன. அதில் பெண்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பூங்காக்களும் செயல்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக ஓரு பூங்கா விரைவில் அமைக்கப்படவுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை முறைப்படுத்தி அதை கையகப்படுத்தி வருகிறோம் பழைய பேருந்து நிலையத்தில் ஒரு நூலகம் மகளிா் சுயஉதவிகுழுக்களுக்கு முக்கியத்துவம் என்று பல்வேறு கட்டமைப்பு பணிகளையும் செய்து வரும் நிலையில் எவ்வளவு வளர்ச்சிகள் அடுத்து வரும் 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையின்படி மாநகராட்சி நிர்்வாகம் பணியாற்றியுள்ளது. அதற்கு மாமன்ற உறுப்பினா்களும் அரசுத்துறை அலுவலா்களும் ஊழியா்களும் ஓத்துழைப்பு வழங்கியுள்ளீா்கள் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தற்போது பணியாற்றும் மாமன்ற உறுப்பினா்கள் இனி வரும் காலங்களில் தற்போதைய பணியை காட்டிலும் கூடுதலாக பணி செய்ய வேண்டும் ஓவ்வொரு வாா்டுகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக எனக்கு ெதாிவிக்க வேண்டும். என்று பேசினாா்.
பின்னா் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள இரு மாமன்ற உறுப்பினர்களை மையமாகக் கொண்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதில் மாநகராட்சியின் 51-வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மந்திரமூர்த்தியும், 17-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராமரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதில், மந்திரமூர்த்தி அதிமுக மாநகராட்சி கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட அதற்கு பதிலாக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியிருந்தார். இந்நிலையில், மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்த மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர், தாங்கள் முன்பு அமர்ந்து வந்த அதே இருக்கையில் அமர அனுமதி வழங்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன் பொியசாமி அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையில் மந்திரமூர்த்தி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, பழைய அமர்வு ஏற்பாட்டை தொடர முடியாது, என்று தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து, தங்களுக்கு உரிய இருக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அனுமதி வழங்க முடியாது என்று மேயர் ஜெகன் பொியசாமி உறுதியாக தெரிவித்தார். மேயர் ஜெகன் பொியசாமி ஆவேசமாக பேசுகையில் விஜய் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மாநகரில் பெண்கள் கூட பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை உள்ளது, என்று குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினார். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மாமன்ற உறுப்பினர்கள் குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதனால் கூட்டத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது. இறுதிவரை மந்திரமூர்த்தி மற்றும் ராமர் தரையில் அமர்ந்தபடி தங்களது போராட்டத்தை தொடர்ந்த நிலையில் திமுக மேயா் ஜெகன் பொியசாமிக்கு ஆதரவாக திமுக அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் செயல்பட்டு இருவரையும் மாமன்ற உறுப்பினா்கள் மூலம் வௌியேற்றுவதற்கு முற்பட்ட போது தாங்கள் இருவரும் வௌிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினாா்கள். மாநகராட்சி வளர்ச்சிபணிகள் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற 20 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் எல்லோருக்கும் வாழ்வில் ஏற்ற தாழ்வு வரும் அதிமுக தொடா்ந்து டெபாசிட் இழந்ததால் கழுத்தில்துண்டை போட்டுக்கொண்டு அரசியலில் லாபம் அடைவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக கூறினாா்.
கூட்டத்தில் மாநகராட்சி பொறியாளர் திலகா, உதவி ஆணையா்கள் வெங்கட்ராமன் ஜாங்கிா்பாட்ஷா, பொறுப்பு உதவி ஆணையாளா்கள் காந்திமதி, முனீா் அகமது,உதவி செயற்பொறியாளர்கள் ராஜேஷ்கண்ணா லெனின் சுகாதார ஆய்வாளா்கள் ஹாிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன் ராஜசேகா் ராஜபாண்டி மண்டலத்தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி நிா்மல்ராஜ் அன்னலட்சுமி கலைச்செல்வி கவுன்சிலா்கள் கீதாமுருகேசன் சுரேஷ்குமாா், ரெங்கசாமி, இசக்கிராஜா, சரவணக்குமாா் சந்திரபோஸ் கண்ணன் பொன்னப்பன் ராமகிருஷ்ணன் கனகராஜ் ரெக்ஸின் அதிஷ்டமணி சோமசுந்தாி வைதேகி சுப்புலட்சுமி ஜெயசீலி தனலட்சுமி முத்துமாாி ராமுஅம்மாள் மும்தாஜ், விஜயகுமாா் முத்துவேல் ராஜதுரை பட்சிராஜ் பேபி ஏஞ்சலின் ாிக்டா உள்பட பலா் கலந்து கொண்டனா்.


