மாநகராட்சிக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் ஜெகன் பொியசாமி பேட்டி.!

 

தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் நான்கரை ஆண்டு காலமாக பல்வேறு பிரச்சனைகளை மாமன்ற கூட்டத்தில் எடுத்து வைத்து மக்கள் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியின் 51-வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மந்திரமூர்த்தியும், 17-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராமரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதில், மந்திரமூர்த்தி அதிமுக மாநகராட்சி கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கியதாக அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியிருந்தார். அதற்கு பதில் 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி அதிமுக கொறடாவாக நியமனம் செய்யப்படுள்ளார். ஆகவே ஜெயலெட்சுமிக்கு அந்த இடத்தை வழங்கி உள்ளோம். ஆனால் முதலில் இருக்கையில் அவர் எனக்கு இடம் வேண்டும் என்கின்றார். 

மக்கள் பிரச்சினையை மந்திரமூர்த்தி பேசாமல் வீடியோ எடுத்து ரிலீஸ் போட்டுவிட்டு போய்விடுவார். அவருக்கு இருக்கை மறுக்கப்படவில்லை.. இடம் கொடுக்கப்பட்டது.. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார் மந்திரமூர்த்தி.. தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி அடையலாம் என்ற நோக்கில் இவ்வாறு செய்து வருகிறார்... அவருடைய நோக்கம் கூட்டம் நடத்தக்கூடாது என்பதே. 50 ஆண்டு காலம் வரை தூத்துக்குடி எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி கொடுத்ததை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.. மேலும் மாநகராட்சிக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது.. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் ஜெகன் பொியசாமி  கூறினார்...

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி