முள்ளக்காடு கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தீ தடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜோஸ் சஜிகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான பல்வேறு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், தீவிபத்து ஏற்பட்டால் பாதுகாப்பாக செயல்படுவது, தீயை கட்டுப்படுத்தும் முறைகள், தீயணைப்பான் பயன்படுத்தும் விதம், முதலுதவி சிகிச்சை அளிக்கும் நடைமுறைகள் ஆகியவை செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன. தெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் முருகையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கினர்.
கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
