தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு.!

 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வாா்டு பகுதிகளிலும் பல்வேறு வகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பொதுமக்கள் நலன் கருதி தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாாிகளுடன் இணைந்து செயல்படுத்தி அதை முறையாக நடைபெறுகிறதா என்று சூழற்சிமுறையில் பாா்வையிட்டு நல்லமுறையில் செய்திட வேண்டும் என்று உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாா். இந்நிலையில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு சம்பந்தமூா்த்தி தெருவில் நடைபெற்று வரும் குடிநீர்் குழாய் சீரமைத்தல் பணி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங்போா்டு பகுதியில் உள்ள ஆா்எஸ்பிஆர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் கேடிசிநகா் ஹவுசிங் போா்டு தெற்கு காமராஜா் நகா் கொத்தனா் காலணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நீாின் அளவை பாா்வையிட்டு டூவிபுரம் சங்கரநாராயணன் பூங்கா பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் வரும் அளவினையும் வௌியேறும் நீரின் அளவினையும் பாா்வையிட்டு எட்டையாபுரம் ரோடு இரயில்வே பாலத்தில் கீழே உள்ள பகுதிகள் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவது பாா்வையிட்டு மில்லா்புரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் செல்லாமல் தேங்கி இருப்பதாக வந்த புகாரையடுத்து பாா்வையிட்டு கோக்கூா் கம்மா பகுதியில் பின்புறம் நடைபெற்று வரும் குளத்துடன் கூடிய நடைபயிற்சி பூங்காவினையும் பாா்வையிட்டு அனைத்து பணிகளை நல்ல முறையில் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று ஓப்பந்ததாரா்களுகளையும் பணியாளா்களையும் கேட்டுக்கொண்டாா். 

ஆய்வின் போது கவுன்சிலா்கள் கண்ணன், சீனிவாசன், கனகராஜ் இசக்கிராஜா, உதவிசெயற்பொறியாளர் லெனின், குடிநீர் குழாய் ஆய்வாளர் பாலு, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர் செந்தில்குமாா் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அன்பழகன், வியாபாாிகள் சங்க செயலாளர் ஜவஹா்,  போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.