"தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள்" கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை

எனது கணவரின் உடலை கொண்டுவர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி  தமிழக அரசு தற்காலிக பணியாளருக்கான ஆணை தான் வழங்கியுள்ளது எனக்கு நிரந்தர பணி வேலை வேண்டும் இன்சூரன்ஸ் பணம் வரவில்லை எனக்கு வாங்கித் தாருங்கள் கப்பல் மாலுமி மனைவி கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த போது கப்பலில் வைத்து உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார். இதனையடுத்து நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறுவதற்கு கனிமொழி எம்.பி நிஷாந்த் வீட்டிற்கு சென்று நிஷாந்த் மனைவிக்கு ஆறுதல் கூறினார் அப்போது நிஷாந்த் மனைவி எனது கணவரின் உடலை கொண்டு வருவதற்கு தீவிர நடவடிக்கை எடுத்த உங்களுக்கு நன்றி என கூறினார். தமிழக அரசு எனக்கு தற்காலிக பணியாளர் பணி தான் வழங்கியுள்ளது நீங்கள் எனக்கு நிரந்தர பணி பெற்றுத் தர வேண்டும் உங்களால் முடியும் என நிஷாந்த் மனைவி கனிமொழி எம்பியிடம் கூறினார் அதுபோல எனது கணவரின் மரணத்திற்கான இன்சூரன்ஸ் தொகை இதுவரை வரவில்லை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதற்கு கனிமொழி எம்பி கண்டிப்பாக நிரந்தர பணி பெற்று தர நடவடிக்கை எடுப்பேன் அது போல இன்சூரன்ஸ் தொகை பெற்று தர 100சதசவீதம் முயற்சி செய்வேன் என்று நிஷாந்த் மனைவியிடம் கனிமொழிஎம்.பி என்று கூறினார் 

உடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவர்அணிதுணைச்செயலாளர் புளோரன்ஸ், மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி செந்தில்குமாா் பிரபாகா் ஜேஸ்பா் அல்பட், மற்றும் பலா் உடன் இருந்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி