தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் பழுது ஏற்பட்டால் அதனை பராமரிப்பதற்கு ஏற்கனவே இருந்த வாகனம் பழுதடைந்து விட்டது இந்நிலையில் மாநகராட்சி சார்பில் 10 லட்சம் மதிப்பில் புதியதாக தெரு விளக்கு பராமரிப்பு வாகனம் வாங்கப்பட்டுள்ளது அந்த வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து ஆணையர் ப்ரியங்கா முன்னிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தை துவக்கி வைத்தார். அந்த வாகனத்தை இயக்குமாறு பணியாளருக்கு உத்தரவிட்டார். 

அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டு இருந்த தெரு விளக்கு பராமரிப்புக்கான கிரேன் எவ்வளவு உயரம் உயர்த்த முடியும் நான்கு பக்கமும் சுற்ற முடியுமா என்று கேட்டார் அதற்கு பணியாளர் சுமார் 40 முதல் 50 அடி வரை உயரம் வரும் நான்கு பக்கமும் எந்த திசைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று பணியாளர் கூறினார் வாகனத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் பாதுகாப்பான முறையில் நின்று தெரு விளக்குகளை பழுது பார்க்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ரவீந்திரன். சுரேஷ்குமார். கவுன்சிலா் கனகராஜ் போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் ஜேஸ்பா் ஆணையாின் உதவியாளர் துரைமணி, மேயாின் உதவியாளா் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி