பொட்டலூரனி கிராமத்தில் 772 வது நாளாக மீன் கம்பெனி அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம்.!


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டலூரனி கிராமத்தில் உள்ள மூன்று மீன் கம்பெனிகளை மூட வேண்டும் இந்த கம்பெனியால் கிராம மக்கள் குடி இருக்க முடியவில்லை சுகாதாரம் இல்லை துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி பொட்டலூரனி கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று 772 வது நாளாக போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு கிராம மக்கள் பரபரப்பாக போஸ்டர் அடித்து மாவட்டம் முழுவதும்  போடப்பட்டுள்ளது தமிழக முதலமைச்சர் விஜய் பரந்தூர் மக்களுக்கு நீதி வழங்கியது போல பொட்டலூரணி கிராம மக்களுக்கும் நீதி வழங்குங்கள் என்று மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. 

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதன்ராஜா அமைச்சரானதும் கண்டிப்பாக பொட்டலூரணி கிராமத்தில் உள்ள மீன் கழிவுகளை மூடப்படும் என்று கூறினார் கிராமத்துக்கு வருவதாகவும் கூறினார் ஆனால் நேரில் இதுவரை வரவில்லை ஆனால் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மட்டும் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி