சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என புகார்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு.!
திருவண்ணாமலையில் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையின் 7 குழுக்கள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தென்மாத்தூரில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் ஆழ்வார் பேட்டையில் உள்ள எ.வ.வேலு வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 13 இடங்களில் DVAC சோதனை நடைபெற்ற நிலையில்
சாலை அமைத்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு என எழுந்த புகார் தொடர்பாக எ. வ. வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
