தூத்துக்குடி கடற்கரை தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழாவை முன்னிட்டு மேயர் ஜெகன் பொியசாமி அடிப்படை பணிகளை ஆய்வு செய்தாா்.!

 

தூத்துக்குடி கடற்கரை சாலை வடபாகம் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளே இருக்கும் தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல திருவிழா வருகிற வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெற இருக்கிற இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் கலந்து கொள்வார்கள் மூன்று நாள் நடைபெறும் திருவிழாவில் பொதுமக்கள் அமர்ந்து திருவிழாவை கண்டுகளிக்கும் வகையில் ஆலய நிர்வாகத்தினர் கோவில் வளாக பகுதியில் உள்ள முள் செடி. மணல் திட்டு குப்பைகள் தேங்கியுள்ளது அதனை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமியிடம் கோரிக்கை வைத்தனர் அப்போது நிர்வாகத்தினரிடம் கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தூய சிந்தா யாத்திரை மாதா திருத்தல ஆலயத்திற்கு சென்றார் என்னென்ன வசதிகள் செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.  உடனடியாக மாநகராட்சி ஜேசிபி இயந்திரம் அங்கு வரவழைக்கப்பட்டது அதுபோல தூய்மை பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனா்.  உடனடியாக ஆலய வளாகப் பகுதியில் தேங்கி கிடந்த மணல் திட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டது. அதுபோல ஆலய வளாகப் பகுதியில் இருந்த முள் செடி மற்றும் தேவையற்ற செடிகள் முழுவதும் ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு ஆலய வளாகப் பகுதி முழுவதும் சமப்பகுதியாக அமைக்கப்பட்டது அதுபோல ஆலயத்துக்கு வரும் மக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்திலும் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது திருவிழா நடைபெறும் மூன்று நாட்களும் மாநகராட்சி பணியாளர்கள் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவார்கள் அது போல குப்பைகளை போடுவதற்கு இரண்டு பெரிய ட்ரம் வைக்கப்படும் என்று நிர்வாகிகளிடம் உறுதியளித்தார். ஆலய வளாகப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்படும் வரை மேயர் ஜெகன் பொியசாமி அங்கேயே இருந்து பணிகளை பார்வையிட்டார் என்பது குறிப்பிடதக்கது. 

மாநகாட்சி சுகாதரா ஆய்வாளா் ஹரி கணேஷ், மண்டலத்தலைவா் நிர்மல்ராஜ், மாநகர திமுக மீனவரணி அமைப்பாளர் டேனியல், வட்டச் செயலாளர் ரவீந்திரன். போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர், பகுதி அணி துணை அமைப்பாளா் எமல்டன், மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆலய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி