"கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்" -பிஜேபி நயினாா் நாகேந்திரன் கேள்வி.?
தூத்துக்குடி கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாராயணாவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
கர்நாடகாவை சேர்ந்தவர் வெங்கட நாராயணா. இவர் ஜனநாயகன் படத்தில் தயாரிப்பாளர். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் தமிழகத்தின் முதல்வர் விஜய் வெங்கட் நாராயணன் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி, கர்நாடக முதல்வர் சிவக்குமாரின் நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்? இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம்.
கர்நாடகாவில் ஏற்கனவே மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது, தென்பெண்ணை ஆறு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக இவர் இருந்தால் தமிழகத்திற்கு எப்படி நீதி கிடைக்கும் இது பாஜகவின் குற்றச்சாட்டு. தவெக நிர்வாகிகள் நேற்று மட்டும் நான்கு பேர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கின்றனர். ஆட்சியில் இருப்பதால் தவெகவினரை காவல் துறையினர் கைது செய்ய முடியாத ஒரு சூழ்நிலை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் எப்படி பாலியல் வன்கொடுமை, கஞ்சா உள்ளிட்டவைகள் இருந்ததோ அதே அளவுக்கு இன்றைக்கு தமிழகம் மிக மோசமான சூழ்நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மக்கள் வருங்காலத்தில் எப்படி தீர்ப்பு சொல்ல போகிறார்கள் என்பது குறித்து தான் தெரியும். சட்டமன்றத்தில் முதல்வர் செயலுக்கு பாஜக மிகுந்த கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. முதல்வர் என்ற தன்மையில் நடந்து கொள்ளவில்லை தன்மையை மறந்து கொண்டு கையை வீசி நான் சோலியை முடித்து விடுவேன் என்றால் நான் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொல்கிறார். முதல்வர் இப்படி சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
அப்பாவை காணவில்லை என்கிறார் எந்த அப்பாவை தேடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 3 மாநில முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் எங்கே என்றால் அரிவாளை வைத்து வெட்டி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழக முதல்வருக்கு தமிழகத்தைப் பற்றியோ, தமிழக மக்களை பற்றியோ கவலை இல்லை. மூன்று மாநில முதல்வர்கள் கூட்டம் போட்டு பேசுகின்றனர். அதில் இவர் கலந்து கொள்ளவில்லை. போகவில்லையா? தெரியவில்லையா? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையா? என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன்.
போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மரத்தான் ஓடினால் மட்டும் முடியாது காவல்துறையை சுதந்திரமாக இயங்கி விட வேண்டும். அப்போது தான் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும். சினிமாவில் ஓடுவது போன்று ஓடிக்கொண்டு ஸ்டூடியோவில் நடப்பது போன்ற சட்டமன்றத்தில் நடந்து கொண்டால் வாக்களித்த மக்கள் எப்படி திரும்ப போகிறார்கள் என்பது தான் தெரிய வரும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினாா்.
