முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு.!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்க்கும்போது சினிமாவில் நடித்துக் கொண்டு நடிகையோடு சந்தோஷமாக இருந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டீர்களே என்று முழிப்பதுபோல் முகம் உள்ளது என தூத்துக்குடி, ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில் தவெகவினர் அளித்த புகாரின்பேரில் ஆத்தூர் காவல்நிலைய போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தமிழக முதல்வர் விஜய் பற்றி ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோ*தலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் குறித்து விமர்சித்து பேசினார்.

குறிப்பாக முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாகவும்,. சட்டசபையில் விஜய் நடந்துகொண்டதை வைத்தும் கடுமையாக விமர்சித்து பேசியதாகவும் தமிழக வெற்றிக் கழக ஆத்தூர் பகுதி நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மரியாதைக் குறைவாகவும் க*லவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக விஜய் குறித்து மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோ*தலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி