தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு.!
தூத்துக்குடி மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் 8வது ஆண்டு பேரவைக்கூட்டம் சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ரவிதாகூர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி கந்தசாமி கொடியேற்றினாா். மாவட்ட நிர்வாகி தஸ்லீஸ் வரவேற்புரையாறினார். முனிஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார் பேரவை கூட்டத்தை சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார் மாவட்டச்செயலாளர் பெருமாள் வேலை அறிக்கை முன் வைத்தார். மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி வரவு செலவுஅறிக்கை முன் வைத்தார். பேரவையை நிறைவு செய்து சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் பேசினார். உப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணவாளன் வாழ்த்தி பேசினார்.
கூட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தை முறையாக செயல்படுத்கோரியும். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை உடல் உழைப்பு தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி உயர்த்தி வழங்குதும், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலம் இலவச வீடு, வீடு கட்ட நிதி, திருமண நிதி ரூ20000. விபத்து மரணம் 5லட்சம், இயற்கை மரணம் 2 லட்சம். கட்டுமானம் நலவாரியம் போல் உயர்த்தி வழங்கிடு, தீபாவளி போனஸ் நலவாரியமே ரூ5000 வழங்கு. ஓய்வூதியம் ரூ5000 வழங்கு. பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் 2500 வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டத் தலைவராக பெருமாள் மாவட்டச் செயலாளராக பேச்சிமுத்து மாவட்ட பொருளாளர் சுப்புலட்சுமி மாவட்ட துணைத்தலைவர்களாக அந்தேரியாஸ் பாலு தங்கராஜ் கந்தசாமி பெஸ்டி ஆக்னஸ் ராமலிங்கம் துணைச் செயலாளர்களாக தசலீஸ் முனிஸ்வரன் செல்வவள்ளி ராமச்சந்திரன் ஸ்டெல்லா ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் மாவட்ட நிர்வாகி பெஸ்டி நன்றியுரையாற்றினார்.
