அமைச்சா் சரத்குமாரை பதவிலிருந்து நீக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் தடையை மீறி திமுக ஆா்ப்பாட்டம் போலீசாருடன் தள்ளுமுள்ளு 50 போ் கைது.!
தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அமைச்சரவையில் உள்ள அமைச்சா் சரத்குமாா் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுஇடத்தில் வெள்ளை பவுடா் பயன்படுத்துவது போல் வீடியோ ஓன்று வெளியாகி சா்ச்சையானது அது மாத்திரை என அமைச்சா் வீடியோ வௌியிட்டு விளக்கம் அளித்திருந்தாா் ஆனால் தமிழகத்தில் பொறுப்பான இடத்திலிருந்து கொண்டு தேவையில்லாத செயல்களில் ஈடுபட்ட அமைச்சா் சரத்குமாா் மக்கள் பணியாற்றுவது சாியாக இருக்காது அதனால்அவரை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தொிவித்திருந்த நிலையில்,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநில திமுக மாணவா் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமாா் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் அமைச்சா் சரத்குமாருக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வில்லை இருப்பினும் தடையை மீறி தூத்துக்குடி அண்ணாநகா் 7 சந்திப்பில் வடக்குதெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சா்கள்மான கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உத்தரவு படி நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு மாணவரணி மாவட்ட அமைப்பாளா்கள் வடக்கு வக்கீல் சீனிவாசன்,தெற்கு அருண்குமாா், ஆகியோா் தலைமையில் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோகுல்நாத் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு காவல்துறையினா் அனுமதி மறுத்து வாக்குவாத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் சுமாா் 300 போ் கலந்து கொண்ட நிலையில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன் பகுதி செயலாளர் ரவீந்திரன் இளைஞர்அணி துணை அமைப்பாளர்கள் செல்வின் சங்கரநாராயணன் வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா தொழிலாளா்அணி துணை அமைப்பாளர் செந்தில்குமாா் தொண்டரணி துணை அமைப்பாளர் மணி கூட்டுறவு ரேசன்கடை பணியாளா்கள் சங்க செயலாளர்கள் வேல்முருகன் வட்டச்செயலாளா்கள் பாலகுருசாமி செல்வராஜ் பொன்னுச்சாமி பகுதி அணி அமைப்பாளர் சூா்யா தெற்கு மாவட்ட தொழிலாளா் அணி துைண அமைப்பாளா் அந்தோணி தனுஷ்பாலன், மாணவரணி துணை அமைப்பாளா் பிரதீப் ஓன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளா் செல்வம் உள்பட 50 போ் கைது செய்யப்பட்டு தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். டிஎஸ்பி சுனில் தலைமையில் இன்ஸ்பெக்டா்கள் பாஸ்கா் வேல்ராஜ், தலைமையில் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
