எபோலோ வைரஸ் தொற்று: தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கு போடப்படுகிறதா? பொது சுகாதாரத்துறை விளக்கம்.!
எபோலோ வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம், விரைவில் தமிழ்நாட்டியில் ஊரடங்கு உத்தரவு வரும் என்ற தகவல்களுக்கு பொது சுகாதாரத்துறை இன்று விளக்கமளித்துள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் புண்டிபுக்யோ என்ற தொற்று காரணமாக எபோலா காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நோய்க்கு தற்போது வரை தடுப்பூசியோ சிகிச்சையோ கண்டறியப்படவில்லை என்பதால் உலக சுகாதார அமைப்பு இந்த நாடுகளில் சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது. இதையடுத்து ஆப்பிரிக்க நாடுகளில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேநேரம் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் பலர் படிக்கின்றனர். மேலும் பலர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அதேபோல் ஆப்பிரிக்கர்களும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இவர்களை கருத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு மக்கள் அத்தியாவசியப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும்படி மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது. அதேபோல இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இவர்களை கருத்தில் கொண்டு, இந்த நாடுகளுக்கு மக்கள் அத்தியாவசியப் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கும்படி மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவுறுத்தியது.
அதேபோல இந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
40+ வயதுக்குப் பிறகு லிவர் ஹெல்த்தை அலட்சியப்படுத்தாதீர்கள்
இந்நிலையில்தான் எபோலா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற செய்தி வெளியானது. மேலும் விரைவில் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. இத்தகவல்களுக்கு பொது சுகாதாரத்துறை இன்று பதிலளித்துள்ளது.

அதன்படி, “கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு மட்டுமே முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. மற்றபடி தற்போது அதற்கான எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதேபோல சமூக வலைதளங்களில் எபோலா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு என்ற அறிவிப்பு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழக அரசு மற்றும் தமிழக சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்படும். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.