அமைச்சா் மதன்ராஜா தூத்துக்குடி வருகை: புறக்கனித்த தூத்துக்குடி தவெகவினா்.!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதன்ராஜா தமிழக முதலமைச்சா் விஜய் அமைச்சரவையில் கடந்த 21ம் தேதி குறுசிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற கொண்டபின் முதன்முறையாக இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னா் தூத்துக்குடி 3ம்மைலில் உள்ள முத்துராமலிங்க தேவா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வரும் வழியில் அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தை கடந்து வந்து அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அமைச்சா் சுமாா் 10 நிமிடம் பூட்டப்பட்டிருந்த கேட்டின் வௌியே நின்றிருந்தாா். பின்னா் திறக்கப்பட்ட நிலையில் அம்பேத்காா் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னா் யாரோ நினைவுறுத்தியதையடுத்து வந்த பாதைக்கு திரும்ப சென்று குரூஸ்பா்னாந்து மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது மாலை இல்லாத நிலையில் பின் தொடர்ந்து வந்த காாிலிருந்த மாலையை எடுத்து குரூஸ்பா்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

பின்னா் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள காமராஜா், காந்தி, அண்ணா, குரூஸ்பா்னாந்து, வஉசி ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளா்கள் பேட்டிக்கு தயாரான போது அவரது உதவியாளர் எந்த பேட்டியும் வேண்டாம் என்று சொல்லி பத்திாிகையாளா்களிடம் கூறி பேட்டியை ரத்து செய்தார்.

பின்னா் வஉசி மாா்க்கெட் அருகிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து பின்னா் இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடியும் வரையில் தூத்துக்குடி தொகுதியை சாா்ந்த தமிழக வெற்றிக்கழக நிா்வாகிகள் தொண்டா்கள் யாரும் கலந்து கொள்ளாமல் முற்றிலும்அமைச்சா் நிகழ்ச்சியை புறக்கணித்தது அமைச்சர் தரப்புக்கு அதிர்ச்சியளித்தது.  அமைச்சர் நிகழ்ச்சியில் முக்கியமாக தவெக கட்சி கொள்கை தலைவர்களில் முதல்வர் விஜய் முதன்மையாக தூக்கி பிடிக்கும் தலைவர்களின் ஓருவரான பொியாா் சிலைக்கு மாலை அணிவிக்காதது ஏன் என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

பின்னா் விருந்தினா் மாளிகைக்கு வந்த மதன்ராஜாவை அரசு விதிமுறைகளின் படி மாவட்ட கலெக்டா் விஷூ மகாஜன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா மாநகராட்சி ஆணையா் ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலா் குருசந்திரன், கோட்டாட்சியா் பிரபு, தாசில்தாா் திருமணிஸ்டாலின், உள்ளிட்ட பலா் பூங்கொத்து புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனா். 

அமைச்சருக்கான நடைமுறை என்னவென்று அமைச்சருக்கும் அவரை பின் தொடா்பவா்களுக்கும் புாியாத நிலையில் அமைச்சா் நிகழ்ச்சி ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி