கர்நாடகாவில் சொத்து தகராறில் பயங்கரம் : ஒரே குடும்பத்தில் 6 பேர் படுகொலை - அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கும்பல் வெறிச்செயல்.!
பெங்களூரு, மே.30- விஜயாப்புரா அருகே சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் அப்பு கவுடா. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவணசித்தப்பா. இவர்கள் 2 பேர் குடும்பத்தின ருக்கும் இடையே 10 ஏக்கர் நிலத்துக்காக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் இரு குடும்பத்தினரிடையேயும் சொத்து குறித்து மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனை ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தி தீர்த்து வைத்ததனர். பின்னர் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே, இதனை தீர்த்து வைக்க மீண்டும் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
பஞ்சாயத்துக்கு வந்திருந்த ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினரிடம் அப்பு கவுடாவின் குடும்பத்தினர் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுசுவார்த்தை நடத்தினர். இருத ரப்பு பேச்சுசுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது. அப்போது அப்புகவுட மற்றும் அவ ரது குடும்பத்தினரின் கோரிக்கையை ரேவணசித்தப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஏற் கவில்லை. அதுபோல் அவர் தரப்பில் வந்திருந்தவர்களும் ஏற்கவில்லை.
இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைக லப்பாக மாறியது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கடும் கோப மும் ஆத்திரமும் அடைந்த அப்புகவுடாவும், அவரது தரப்பினரும் ஏற்கனவே திட்டம் தீட் டியபடி தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் ரேவண சித்தப்பா மற்றும் தாங் கள். அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். மேலும் துப் பாக்கியாலும் அவர்களை நோக்கி சுட்டனர்.
இதில் ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினரான துண்டப்பா(வயது 65), சிவபுத்ரா(58), சந் திரகாந்த்(55), சிவபுத்ராவின் மகன்கள் ராகுல்(25), சமர்த்(23) மற்றும் தோட்ட சப்பாரப்4 வேலைக்பார 6 கொல்லப்பட்டனர். மேலும் அரவிந்த் யஷ்வந்த்(72) மற்றும் சந்தீப் பாரத் மானே(33) ஆகிய 2 பேரும் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஓட ஓட விரட்டியும், தாக்கியும் கொடுரமாக கொலை செய்துவிட்டு அப்பு கவுடாவும், அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.
மேலும் பஞ்சாயத்துக்கு வந்திருந்த ஊர் மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து சிதறி ஓடினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சடச்சனா போலிசார், 6 பேரின் உடல் களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து, அப்புகவுடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதறத்தையும் ஏற்ப டுத்தி உள்ளது.
