கடையநல்லூர் அருகே பரபரப்பு: திருட சென்ற கடைக்கு தீ வைத்த கொள்ளையன்.!!- பணம் குறைவாக இருந்ததால் ஆத்திரம்.!!

கடையநல்லூர் அருகே திருடச் சென்ற கடையில் பணம் குறைவாக இருந்ததால் கடைக்கு தீ வைத்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் அருகே சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அரு கில் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பலசரக்குக் கடை உள்ளது

இந்தக் கடையை சொக்கம் பட்டி கென்னடி தெருவை சேர்ந்த மாடசாமி மகன் கண் ணன் என்பவர் நடத்தி வருகி றார். அவர் நேற்று முன்தினம் இரவில் கடையை அடைத்து விட்டு சென்று விட்டார்.

நேற்று அதிகாலை அருகி லுள்ள டீக்கடைக்காரர் டீக்க டையை திறக்க வந்தபோது கண்ணனுடைய பலசரக்குக் கடை தீப்பிடித்து எரிந்து கொண் டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில் கடையின் உரிமையாளர் கண்ணன் விரைந்து வந்தார். அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.'

இருப்பினும் கடைக்குள் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பி லான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சியில், நேற்று அதி காலை சுமார் 2.30 மணிக்கு மர்ம நபர் ஒருவர் கண்ணனின் கடைக்குள் புகுந்தது தெரிய வந்தது. இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் கடைய நல்லூர் அருகே மேல கடைய நல்லூர் பண்பொழி சாலைப்ப குதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் லட்சுமணன் (வயது 31) என்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சொக் கம்பட்டி இன்ஸ்பெக்டர் மது விக்ரம் தலைமையிலான போலீ சார் லட்சுமணனை நேற்று கைது செய்து விசாரணை நடத் தினர்.

அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நேற்று முன்தினம் அதிகாலையில் கண்ணனின் கடைக்குள் லட்சுமணன் புகுந்தார். ஆனால் அங்கிருந்த கல்லா பெட்டியில் ரூ.1,500 மட்டுமே இருந்தது. இதனால் ஆத் திரமடைந்த லட்சுமணன், அந்த கடைக்கு தீ வைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது. திருடிய நபர் அந்தக் கடைக்கு தீ வைத்து  சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கைது செய்யப்பட்ட லட்சுமணன் மீது சேர்ந்தமரம், கடைய நல்லூர், சொக்கம்பட்டி உள்பட பல்வேறு போலீஸ் நிலையங் களில் 5-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் ஒவ்வொரு பகுதிகளிலும் வீடு அல்லது கடைகளில் திருடச் செல்கின்றபோது பணம் இல்லை என்றால் அங்கு தீ வைத்து விட்டு செல்வது இவரின் வழக்கமாக பாணியாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி