வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கோடை கால இலவச ஓவிய பயிற்சி நிறைவு விழா.!

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவது பிறந்தநாள் மற்றும் மே.01 தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப்பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

ஒருமாதம் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பு 30-05-2026 அன்று நிறைவுபெற்றதையொட்டி மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவிய வண்ணம் தீட்டும் உபகரணங்கள் வழங்கும் நிறைவு விழா வேலூர் மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு தலைமையில் குடியேற்றம் புவனேசுவரிப்பேட்டை பெரியார்  அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. 

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால்  அனைவரையும் வரவேற்றார் குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம்  இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேனாள்  மாவட்ட செயலாளர் தி.க. கு. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியேற்றம் நகர திராவிடர் கழகத் தலைவர் சி.சாந்தகுமார்  இந்நிகழ்வில் புரட்சி பாடல்களை பாடினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி கோடைக்கால ஓவியப்பயிற்சி முகாம் செயல்பாடுகள் குறித்து தொடக்க உரையில் பேசினார்.மாநில மகளிரணி துனைச் செயலாளர் ந.தேன்மொழி, மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார்,குடியேற்றம் தமிழியக்கம் செயலாளர் ஜெ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களையும்,ஓவிய ஆசிரியர் மெய்யழகன் அவர்களையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட  பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் கலந்து கொண்டு 

இந்த  முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியப் பயிற்சி பெற்றார்கள். இவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவியம் வரையும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், 

பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் மூன்று மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சதுரங்க பெட்டகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்கள்.  இறுதியாக வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க. பரமசிவம் நன்றி உரையாற்றினார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி