கொரியர் ஆபீஸ் வைப்பதாக கூறி பட்டாசு ஆலை நடத்தியது அம்பலம்: கோவில்பட்டி அருகே வெடி விபத்தில் 2 பேர் பலியான நிலையில் தம்பதி உள்பட 3 பேர் கைது.!
கோவில்பட்டி அருகே வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவத்தில் காட்டுப்ப குதியில் கொரியர் ஆபீஸ் வைப்பதாகக்கூறி அனும தியின்றி பட்டாசு தயா ரிக்கும் ஆலை நடத்தியது. போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கட் டிட உரிமையாளர், ஆலை நடத்திய தம்பதி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட னர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில், காட்டுப்பகுதியில் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டாசு கள் தொடர்ந்து வெடித் தது. இந்த சத்தம் புளியங்கு ளம் கிராமத்தில் பலமாக கேட்டதில் பொதுமக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந் தனர். புளியங்குளத்தில் இருந்து 6 கிமீ தூரத்தில் இருக்கும் கோவில்பட்டி யிலும் பயங்கரமாக வெடி சத்தம் கேட்டுள்ளது.
தகவலறிந்து தூத்துக்குடி எஸ்பி அபிஷேக் குப்தா, கோவில்பட்டி சப்-கலெக்டர் ஹூமான் சூமங்கள், தாசில்தார்அப் பணசாமி, டிஎஸ்பி ஜெக நாதன், இன்ஸ்பெக்டர்கள் மேற்கு நவநீதகிருஷ்ணன், கிழக்கு மாரியப்பன், மேற்கு எஸ்ஐ சண்முகம், தீயணைப்பு நிலைய அலுவலர் மாயாண்டி ஆகி யோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வெடிவிபத்து ஏற்பட்டிருந்த கட்டிடம் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி இருந்தது. உள்ளே சென்று பார்த்த தில் பட்டாசு தயாரிப் பில் ஈடுபட்டிருந்த புளி யங்குளத்தைச் சேர்ந்த ஐயப்பன், விருதுநகர் மாவட்டம், புள்ளகவுண் டன்பட்டியைச் சேர்ந்த மாலதி ஆகியோரது உடல் கள் அங்கு புதையுண்ட நிலையில் மீட்கப்பட்டன.
படுகாய மடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இதே ஊரைச்சேர்ந்த சூரியபிர காஷ் என்பவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. ததீவிர சிகிச்சை பலியானவர்களின் உடல் கள், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையில், இந்த கட் டிடத்தை இதே ஊரைச் சேர்ந்த சரவணன், அவ ரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் கட்டிட உரி மையாளர் குருநாதனிடம் வாடகைக்கு பேசியது தெரிய வந்தது.
மேலும் கொரியர் ஆபீஸ் வைக்கப் போகி றோம் என்று கூறி விட்டு, கடந்த 25 நாட்களுக்கு முன்பு பட்டாசு தயாரிக் கும் ஆலையை வைத்துள் ளனர். ஆனால் பட்டாசு ஆலைக்கு உரிய எந்த விதிமுறைகளும் இல்லை. அதில் உள்ள 2 அறைகளில் வெடி மருந்துகளை வைத் துள்ளனர். இந்த ஆலையில் புளியங்குளத்தைச்சேர்ந்த ஐயப்பன், விருது நகர் மாவட்டம், புள்ளக்கவுண் டன்பட்டியைச் சேர்ந்த மாலதி, சூரியபிரகாஷ் ஆகியோர் நேற்று முன்தி னம் இரவு 10 மணியளவில் வெடி தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தனர். ஆலை உரிமையாளரான சரவணன், ஊழியர்களுக்கு இரவு உணவு வாங்குவ தற்காக சென்று விட்டார். அவரது மனைவி மகேஸ் வரி வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கோடை காலம் என்பதால் காற் றோட்டம் இல்லாத நிலை யில் அறையின் கட்டிட வெப்பம் தாங்காமல் பட் டாசுகள் சூடாகி வெடித்த தில் இந்த விபத்து ஏற்பட்டி ருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கட்டிட உரி மையாளர் குருநாதன். பட்டாசு ஆலை உரிமை யாளர்கள் சரவணன், மகேஸ்வரி ஆகியோரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்த னர். கோவில்பட்டி அருகே அனுமதியின்றி காட்டுப் பகுதியில் செயல்பட்ட பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலியான சம்பவம், இப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
