“விசாரணை பெயரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்?”- சென்னையில் எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண்ணிடம் விசாரணை என்ற பெயரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.
நகை மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் குற்றப்பிரிவு எஸ்.ஐ தனசேகரன், வீட்டில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு இளம்பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அதிகார துஷ்பிரயோகம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், புகைப்படம் எடுத்து மிரட்டியதாகவும், முத்தம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
பயந்து கூச்சலிட்ட இளம்பெண்ணை தொடர்ந்து, அங்கிருந்து எஸ்.ஐ தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
