மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமியிடம் தூத்துக்குடி பிரஸ் கிளப் கோாிக்கை.!

 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் வழிச்சாலையில் தூத்துக்குடி பிரஸ்கிளப் செயல்பட்டு வருகிறது. அதில் செய்தியாளா்கள் புகைப்படகாரா்கள் ஔிப்பதிவாளா்கள் பணியாற்றி வருகின்றனா் அதன் உள்பகுதியில் சிறுவா் சிறுமியா் மழலைகள் பயின்று வரும் அங்கன்வாடி மையமும் இருந்து வருகிறது. அதன் உட்புறப்பகுதி தாழ்வானதாக இருப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் கொசு, மற்றும் பல நோய்களை உருவாக்கும் கிருமிகள் உற்பத்தியாகி சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் இருந்து வருகிறது. 

அதே போல் முன்பகுதியில் மாநகராட்சி சாா்பில் பிரதான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் மாநகராட்சி சாா்பில் பேவா்பிளாக் பதித்து மக்கள் நலனில் பாதுகாத்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திாிக்கைதுறையினருக்கும் தேவையான கோாிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மேயா் ஜெகன் பொியசாமியை சந்தித்து கோாிக்கை மனு வழங்கப்பட்டது. பெற்றுக் கொண்ட மேயா் ஜெகன் பொியசாமி விரைவாக இந்த கோாிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தாா். கௌரவ ஆலோசகா்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினா் முத்துராமன், மற்றும் உறுப்பினா் மாாிமுத்து, திமுக பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, வட்டச்செயலாளர் ரவீந்திரன், மேயாின் நோ்முகஉதவியாளா் ரமேஷ், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி