ஐந்து தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியானதாக அறிவிப்பு -அரசிதழ் வெளியீடு.!

 


தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஐந்து தொகுதிகள் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஐந்து தொகுதிகள் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் அடுத்த ஆறு மாத கால இடைவெளிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

அதிமுக எஸ்.பி. வேலுமணி தலைமையில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றே மூன்று தொகுதிகளும் காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டது.

அந்த வரிசையில் அதிமுக அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் மொத்தம் காலியாகியுள்ளது.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

வேலவன் ப்ராப்பர்ட்டீஸ்(மதுரா கோட்ஸ்): "அரசு புறம்போக்கு நிலம், பிளாட்டாக விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது" - ஆட்சியரிடம் மனு.!