தூத்துக்குடி அருகே கீழ அரசடியில் பெட்ரோல் பங்கை சூறையாடிய போதை கும்பல் :ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.! - தொடரும் குற்றச் செயல்களால் தொழில் செய்ய முடியாத நிலை என உாிமையாளா் திாிஷா குற்றசாட்டு.!

தூத்துக்குடி தருவைகுளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கீழரசடியில் உள்ள பெட்ரோல் பங்க் திருவிக நகரை சேர்ந்த திரிஷா என்ற உரிமையாளர் நிர்வகித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்றிரவு பெட்ரோல் பங்கில் இரண்டு சக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக மூன்று நபர்கள்  போதையில் வந்துள்ளனர். மூன்று நபர்களில் ஒருவர் மட்டும் பெட்ரோல் பங்க் அருகில் பொதுமக்கள் முன்னால் மற்றும் விற்பனை கட்டிடம் முன்பு சிறுநீர் கழித்து உள்ளனர். அவரை பெட்ரோல் பங்க் ஊழியர் இங்கு சிறுநீர் கழிக்கக் கூடாது. சிறுநீர் கழிப்பிடத்தில் கழிக்குமாறு கூறினர். பின்பு ஆணுறுப்பை காட்டிக் கொண்டு தொடர்ச்சியாக போதையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனால் பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் போதை நபர்களுக்கும் ஏற்பட்ட வாய் தகறாரில் மேற்படி 2 நபர்கள் பெட்ரோல் பங்க் ஊழியரை கையைப் பிடித்துக் கொண்டு நெஞ்சில் குத்தி உள்ளனர். பின்பு கெட்ட வார்த்தைகளால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து மூவரும் சென்று விட்டனர். 

பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பின்பு அந்த மூவரும் கூடுதலாக  ஐந்துக்கும்  மேற்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு கையில் மரக்கட்டை, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்ததோடு மட்டுமல்லாமல் பங்கில் பணி புரியும் இரண்டு ஊழியர்களையும் தலையில் காயப்படுத்தி, அலுவலக அறையில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் தொழிலநுட்ப சாதனங்களை சேதப்படுத்தி விட்டு, அறையின் முகப்பு கண்ணாடியை உடைத்து விட்டு பெட்ரோல் போடும் பம்ப் உட்பட மீட்டரின் சேதப்படுத்தியதுடன் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விட்டு சென்றுள்ளனர், இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போதை கும்பலை தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து உாிமையாளா் திரிஷா கூறுகையில்:-

"கடந்த திமுக ஆட்சியோட இந்த தவெக ஆட்சியில் தூத்துக்குடி பகுதியில் கஞ்சா போதை அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த தவெக ஆட்சி அமைந்த காலம் முதல் பலருக்கும் ரொம்ப தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் தொழில் செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த பகுதி தாளமுத்துநகர் காவல் துறை எல்லைக்கு வரும் பகுதியாகும். கஞ்சா பழக்கம் அதிகமாக உள்ளது இந்த அரசு அதிக நெருக்கடியை கொடுக்கிறது. எங்களுக்கு காவல்துறை எந்த உதவியும் செய்யவில்லை. காவல்துறை கையூட்டு பெற்றுக்கொண்டு கஞ்சாவை விற்பனையை செய்கிறது. எங்களால் இப்பகுதியில் தொழில் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது இப்பகுதியில் அதிகமாக கஞ்சா நடமாடுகிறது. இந்த காவல்துறையில் ஒரு வாரத்திற்கு ஒரு கொலை என தொடர்ச்சியாக இந்த எல்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் பெட்ரோல் பங்கில் தொடர்ச்சியாக இந்த மாதிரி சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, இரவு நேரங்களில் காவலர்கள் இப்பகுதியில் ரோந்து வருவது கிடையாது. காவலர்கள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ரோந்து வந்தால் மேற்படி குற்றங்களை தடுக்கலாம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் திாிஷா கூறினார்.