திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஐபி தரிசனத்திற்கு அமைச்சரிடமே பணம் கேட்ட அர்ச்சகர்கள் - அமைச்சரிடமே அர்ச்சகர்கள் பணம் வசூலித்ததால் அதிர்ச்சி..!
இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் 4000 ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர்.
(கடந்த முறை திருச்செந்தூர் சென்று கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர் பாதி வழியில் விட்டு விட்டு ஒரு அர்ச்சகர் பெயரை சொல்லச் சொல்லி சென்றார் அந்த அர்ச்சகரியிடம் அந்த தம்பதியினர் பெயரை குறிப்பிட்டு சொல்லிய போதும் உள்ளே வரவிடவில்லை. கைக்குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆன குழந்தையாக மட்டுமே இருக்கக்கூடும் அவ்வளவு நெரிசலில் பணத்தையும் கொடுத்துவிட்டு பாதியில் அந்த அர்ச்சகரை தேடிச் சென்றது மிகுந்த வேதனையை தந்தது).
தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டின் அனைத்து கோவில்களுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு அக்கோவில் நிர்வாக பணிகள், பக்தர்களுக்கான வசதிகள், அன்னதானத் திட்ட செயல்பாடு மற்றும் கோவில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். குறிப்பாக, பக்தர்களுக்கு நாள் முழுவதும் வழங்கப்படும் அன்னதானத் திட்டம் குறித்து அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது வரவேற்பு பெற்றது.
மேலும் திருச்சி மற்றும் சமயபுரம் அருகிலுள்ள கோவில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, பிரசாதங்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாதது குறித்து கடும் எச்சரிக்கை விடுத்தார்.
திருச்செந்தூரை திருப்பதி போல் மாற்ற நினைப்பவர்கள் அங்கு செய்துள்ள வசதிகள் மற்றும் தரிசனம் செய்வதற்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகளையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அலைபேசி அனுமதி இல்லை என்ற போதும் அதற்கு என்று ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என்ற வசூல் கட்டணம் எங்கும் வாங்கப்படுவதில்லை.
News update
இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அர்ச்சகர், காவலாளிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மொட்டை அடிப்பதற்கு பக்தர்களிடம் பணம் வசூலித்த புகாரில் இரு ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
