தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பெருங்குளம் மாதவையா மறைந்த நூற்றாண்டு நினைவேந்தல் விழா.!


தூத்துக்குடி தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் பஜனை மடம் சன்னதி தெரு பெருங்குளத்தில் மாதவையா நூற்றாண்டு நினைவேந்தல் விழா நடைபெற்றது

விழாவிற்கு பெருங்குளம் பேரூராட்சி மன்ற தலைவரும் மருத்துவருமான புவனேஸ்வரி தலைமை வகித்தாா். சீனிவாசன் கண்ணன் ஆறுமுக பாண்டியன் பேச்சிமுத்து வெங்கடாச்சாரி கதிர்வேல் ராமானுஜம் சோலைமலை பாலாஜ கோமதி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் எழுத்தாளர் மணிமொழி செல்வன் வரவேற்புரையாற்றினார்

கணபதி சுப்ரமணியம் வழக்கறிஞர் மணி காசிராஜன் ஓய்வு ஆசிரியர் ஆறுமுகப்பெருமாள் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோா் அறிமுக உரையாற்றினாா்கள். பேராசிரியர்கள் ராமச்சந்திரன் சத்தியபாலன் இளங்கோமணி முனைவர் மணிமொழி செல்வன் முதல் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கவிஞர் சாகுல் ஹைக்கூ மற்றும் தன் முனைக் கவிஞர் ஓவியர் வரவுணன் ஆகிய விருது பெற்ற படைப்பாளர்களுக்கு பாராட்டு மற்றும் படைப்பாளுமை விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் ஏரல் ராஜன் நன்றியுரையாற்றினாா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி