Posts

மாணவர்களை பள்ளிக்கு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

Image
மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல தடை கோரி திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபுதீன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‛60க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்,' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛மாணவர்களை வகுப்புக்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம். மாணவர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்,' எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்...

டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க முழுமையான தடை

Image
டெல்லியில் நிலவும் சூற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தடை விதிப்பதாக முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா- அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை.!

Image
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தானம், மாவட்ட இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், மாநில மருத்துவ துணைசெயலாளர் ராஜசேகர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி,  வக்கீல் அணிசெயலாளர் சேகர்,  எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, துணைசெயலாளர் வலசை வெயிலுமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் விக்ணேஷ்,  இலக்கிய அணி செயலாளர் நடராஜன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன்,  வர்த்தக அணி செயலாளர் பட்டுராஜா, வக்கீல்கள் செங்குட்டுவன், முனியசாமி, கோமதி மணிகண்டன், சுகந்தன் ஆதித்தன...

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாள் விழா: அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை

Image
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் காய்கனி சிக்னல் அருகே அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்,தெற்கு மாவட்டம் சார்பில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர்,மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ்  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1- 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - செப்.,30ல் முடிவு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.!

Image
  தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு பற்றி வரும் 30ம் தேதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கை முதலமைச்சரிடம் இன்று அளிக்கப்படவுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,  ''தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு பற்றி, ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக வரும் 30 ஆம் தேதி நடக்கும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படும். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனை அடிப்படையில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகளை திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வேறுபட்ட கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் சிலர் 1 முதல் 8ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறப்பது தொடர்பான அறிக்கை இன்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்'' எ...

தனித்துப் போட்டியிட்டால் பாமகவுக்குத்தான் இழப்பு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

Image
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டால் அவர்களுக்குத்தான் இழப்பு அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை என்பதே கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு. யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப்போட்டி என முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை.  சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாங்கு வங்கி சரியவில்லை. வலுவான எதிர்கட்சியாக அதிமுக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை என்பதே கிடையாது'' என அவர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல்: பா.ம.க., தனித்து போட்டி - "அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை" எனவும் குற்றசாட்டு.!

Image
அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லாததால் அக்கட்சி தொண்டர்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று நமது வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம், என குற்றச்சாட்டு கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாத ஒன்பது மாவட்டங்களில், அக்., 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சி தலைமை நிர்வாகிகள், ஒன்பது மாவட்ட துணை பொதுச்செயலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடத்தினர்.கூட்டத்தில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, இன்றும், நாளையும் மனுக்கள் பெறப்படும்.இவ்வாறு ...