தனித்துப் போட்டியிட்டால் பாமகவுக்குத்தான் இழப்பு- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!


ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டால் அவர்களுக்குத்தான் இழப்பு அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை என்பதே கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்குத்தான் இழப்பு. யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப்போட்டி என முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாங்கு வங்கி சரியவில்லை. வலுவான எதிர்கட்சியாக அதிமுக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவோம். அதிமுகவில் உள்கட்சிப் பிரச்சினை என்பதே கிடையாது'' என அவர் கூறினார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்