Posts

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 3.13 லட்சம் பேருக்கு தொடர் சிகிச்சை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தகவல்!

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 3.13 லட்சம் பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளை தேடிச் சென்று அவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் மருத்துவக் குழுவினர் பொதுமக்களின் வீட்டுகளுக்கே நேரடியாகச் சென்று பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், வயது முதிர்ந்த நபர்களுக்கு சேவை செய்தல், அவர்களுக்கு முடநீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தல், தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பிந்தைய சேவை போன்ற மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வர...

சிவில் சர்வீசஸ் UPSC இறுதி முடிவுகள் - அகில இந்திய அளவில் முதல் 4 இடங்களை பிடித்து பெண்கள் சாதனை.!

Image
  UPSC டாப்பர்ஸ் 2021: சிவில் சர்வீசஸ் இறுதி முடிவுகளில் ஸ்ருதி ஷர்மா முதலிடம், அங்கிதா அகர்வால், காமினி சிங்லா முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் என இந்த ஆண்டு பெண்கள் நான்கு முதல் இடங்களிலும் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளனர். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்,(UPSC) தேர்வு முடிவுகள் 2021 அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு ஸ்ருதி சர்மா சிவில் சர்வீசஸ் தேர்வில் முதலிடம் பெற்று ஏஐஆர் 1ஐப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து அன்கிதா அகர்வால் ஏஐஆர் 2 உடன் உள்ளார். UPSC சிவில் சர்வீசஸ்தேர்வு. முழுமையான பட்டியல் கீழே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது -upsc.gov.in

பிரதமர் சென்னையில் துவக்கி வைத்த ரூ.21,000 கோடி மதிப்பிலான திட்டம் அதிமுக ஆட்சி காலத்தில் அடித்தளமிட்டது - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.!

Image
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரப் பொருளாளர் ஆரோக்கிய ராஜ், அம்மா பேரவை நகர செயலாளர் அபிரகாம் அய்யாத்துரை, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,  கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் முருகன், பழனிமுருகன், பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, மன்ற தலைவர் அப்பாசாமி, செயலாளர் வரலட்சுமி, பொருளாளர் ஜெகநாதன், இளைஞரணித் தலைவர் விஸ்வராஜ் மற்றும் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர். பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்ப...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

Image
  கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், குமரி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் #TNRains | #WeatherUpdate

பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி பக்தர்களிடம் ச.34 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது!

Image
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் ஒன்றின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நிதி வசூலித்த புகாரின் பேரில் இளையபாரதம் என்ற யூடிப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.  50 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்து பக்தர்களை ஏமாற்றியுள்ளதாக புகார் கூறப்பட்ட நிலையில் போலீஸ் கைது. பெரம்பலூர்: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி பக்தர்களிடம் ச34 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது! Milaap ஆப் மூலம் F34 லட்சம் வசூலித்து சுருட்டியதாக எழுந்த புகாரில் ஆவடி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கொரோனா பரவல் காணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம். பொது மக்கள் மகிழ்ச்சி.

Image
இன்று காலை 6.35 க்கு மதுரையில்  இருந்து பயணிகளுடன் புறப்பட்ட ரயில் காலை 10.15க்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது. முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையை வலியுறுத்தி தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி மனு கொடுத்திருந்தார். அதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய மதுரை - ராமேஸ்வரம் காலை நேர பயணிகள் ரயில், ராமேஸ்வரம் - மதுரை மாலை நேர பயணிகள் ரயில்களை இன்று முதல் மீண்டும் இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. 2 ஆண்டுகளுக்கு பின் இயக்கப்படும் இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ரயில், காலை 6.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. நீண்ட நாளுக்கு பிறகு இந்த வழிதடத்தில் ரயில் இயக்கப்படுவதால், ப...

மோகன் ஜி-யின் அடுத்த பஞ்சாயத்து.., சாரி படத்தின் பெயர் ‘பகாசூரன்’

Image
 மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து  நடிக்கும்  " பகாசூரன் " படத்தின் டைட்டில் லுக் வெளியானது பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா காரர்களையும் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து  இயக்கும் படத்திற்கு " பகாசூரன்" என்று பெயரிட்டுளார்.  இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்தப்படத்தின் டைட்டிலுக்கு இன்று காலை 11 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட இருப்பதாக  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.