ஆன்மீகமும் அறிவியலும் கலந்த 'மாயோனை'ப் பாராட்டிய புரட்சி நடிகர் சத்யராஜ்*

ரசிகர்களின் கைதட்டல்களை பெற்ற 'மாயோன்' படக்குழுவினர் ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு - சத்யராஜ் பெருமிதம் 'மாயோன்' திரைப்படத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் 'கட்டப்பா' சத்யராஜ் தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'மாயோன்' தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. 'மாயோன்' திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, 'மாயோன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், 'ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு' என்றார். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மாயோன்'. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து ...