Posts

ஆன்மீகமும் அறிவியலும் கலந்த 'மாயோனை'ப் பாராட்டிய புரட்சி நடிகர் சத்யராஜ்*

Image
ரசிகர்களின் கைதட்டல்களை பெற்ற 'மாயோன்' படக்குழுவினர் ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு - சத்யராஜ் பெருமிதம் 'மாயோன்' திரைப்படத்தை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் 'கட்டப்பா' சத்யராஜ் தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'மாயோன்' தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த 'மாயோன்' தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. 'மாயோன்' திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின்  இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, 'மாயோன்' படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், 'ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு' என்றார். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'மாயோன்'. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து ...

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.!

Image
மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு அறிமுகமாகிறார்.  மாறா, குதிரைவால் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். வால்டர், செல்ஃபி படங்களைத் தொகுத்த S.இளையராஜா படத்தொகுப்பாளராகவும், மரியா கெர்ளி கலை இயக்கத்தையும் செய்கிறார்கள். தமிழின் மிக முக்கியமான இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக  “டெவில்” மூலமாக  இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மிஷ்கின் அவர்கள் இதற்கு முன் பல பாடல்கள் எழுதியுள்ளார், பல பாடல்கள் பாடியுள்ளார். அதுமட்டுமன்றி அவர் இயக்கிய படங்களில் பின்னணி இசையில் அவரது பங்கு முக்கியமானது. தற்போது டெவில் திரைப்படத்திற்கு முத்தான நான்கு பாடல்கள் கொடுத்துள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஜூலை 11- அதிமுக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் திடீர் நிறுத்தம்.!

Image
  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபியில் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏற்பாடுகள் திடீரென நிறுத்தம் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்குழுவை நடத்த ஈபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருவதாக தகவல்  

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி.! -டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.66 ஆக வீழ்ச்சி.!

Image
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.66 ஆக வீழ்ச்சியானது.

அமெரிக்காவில் பயங்கரம்! - சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற கண்டெய்னர் லாரியில் பதுங்கி வந்த 46 பேர் மூச்சு திணறி பலி.! - 3 பேர் கைது

Image
  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் கன்டெய்னரில் குவியல் குவியலாக சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதால் போலீஸார்அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சான்டியாகோ நகரின் தென் மேற்கில் உள்ள குயின்டானா சாலை ஒரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரிக்கு வெளியே சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கன்டெய்னர் லாரியை சோதனையிட்டனர். அந்த கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது, கூட்டம் கூட்டமாக உடல்கள் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மெக்சிக்கோ நாட்டிலிருந்து அகதிகளாக அமெரிக்காவுக்குள் எல்லைவழியாக சட்டவிரோதமாக வந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். சான் அன்டோனியோ தீதடுப்பு தலைவர் சார்லஸ் ஹூட் கூறுகையில் “ 46 பேரின் உடல்கள் கன்டெய்னருக்குள் கிடந்ததைக் கண்டுபிடித்தோம். முதல்கட்ட விசாரணையில் இவர்கள்அகதிகளாக இருக்கலாம். இவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர். 12க்கும் மேற்பட்டோர் பதின்வயதினர், 4 குழந்தைகள் இதில் இருந்தனர். சான் அன்டோனியோவில் கடும் வெப்பம் நிலவுகிறது. ஏறக்குறைய 39 டிகிரி வெப்பம்இருப்பதால், கன்டெய்னருக்குள்...

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!*

Image
தூத்துக்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பிரதான நிறுவனமான ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பல்வேறு கிராம மக்கள் மனு அளித்தனர்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு குறைகளை மனுக்களை அளித்தனர். இதனிடையே தூத்துக்குடி மீளவிட்டான், மடத்தூர். புதூர் பாண்டியபுரம். பண்டாரம்பட்டி. சில்வர்புரம், சங்கரபேரி, வடக்கு சிலுக்கன்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், நடுவக்குறிச்சி, குமாரகிரி, சாமிநத்தம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். இது கூறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியதாவது  "ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது இந்த நிறுவனத்தால் இங்க கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். தற்போது இந்த ஆலை மூடப்பட்டு அதன் காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே இந்த ...

மை டியர் பூதம் பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்

Image
பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ள குழந்தைகளுக்கான ஃபேண்டசி திரைப்படமான மை டியர் பூதம் பார்த்து இயக்குநர் N ராகவனை வெகுவாக புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின் அபிஷேக் பிலிம்ஸ் பேனரில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து மஞ்சப்பை மற்றும் கடம்பன் புகழ் N ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் குழந்தைகளுக்கான முழுநீள ஃபேண்டசி திரைப்படமான 'மை டியர் பூதம்' திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஜூலை மாதம் ‘மை டியர் பூதம்’ வெளியாகவுள்ள நிலையில், வெளியீட்டு தேதி ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது. சமீபத்தில் திரைப்படத்தை சிறப்பு காட்சி ஒன்றில் பார்த்த முன்னணி நடிகர்-தயாரிப்பாளரும், திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குநர் ராகவனை தொலைபேசியில் அழைத்து வெகுவாக பாராட்டினார். ‘மை டியர் பூதம்’ படத்தை தான் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததாகவும், திரைப்படத்தோடு உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிகிறது என்றும், அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவோடு படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று உதய...