Posts

குற்றாலம் பகுதியில் செயற்கை அருவிகள் உருவாக்கிய தனியார் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்.! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Image
செயற்கை அருவிகள் இருக்கும் தனியார் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி, ஐந்தருவி செண்பகாதேவி அருவி, புலியருவி, சிற்றருவி , பழத்தோட்ட அருவி ஆகியன இயற்கையான அருவிகளாகும். சீசன் காலங்களில் குற்றால அருவிகளில் குளிக்க தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் அதிகளவில் வருவது வழக்கம். இதையடுத்து வணிக ரீதியில் மக்களை ஈர்க்க குற்றாலம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கையாக அருவிகளை உருவாக்கி இணையதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அவர்கள் இயற்கையான அருவிகளின் நீர்வழிப் பாதையை மாற்றி செயற்கையான அருவிகளுக்கு தண்ணீர் கொண்டுச் செல்கின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ...

உலகக்கோப்பை கால்பந்து - ஜெர்மனியை வீழ்த்தி ஜப்பான் பெற்ற முதல் வெற்றி !

Image
  ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து - 4 முறை உலகக்கோப்பை சாம்பியனான ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி அசத்தல்; உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஜப்பான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்!

"அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பல கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கி குவித்து வைத்து முறைகேடு " - காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை குற்றசாட்டு.!

Image
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பல கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கி குவித்து பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சிதலைவரும், பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "தமிழ்நாட்டின் எதிர்கட்சித்தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று தமிழக ஆளுநரை சந்தித்த பின், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தங்களது ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன என்று ஊடகத்தில் செய்தி பார்த்தேன். ஒரு மனிதரால் இப்படியெல்லாம் உண்மைக்கு புறம்பாக, திரித்து பேசமுடியுமா என்று வியந்து போனேன். தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்குக்குழு தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளையும், சென்ற ஆட்சியில் ஆள்பவர்கள் செய்த தவறுகளையும் ஊழல்களையும் ஆராய்வது குழுவினரின் கடமையாகும். அந்த வகையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் ப...

கடமையை செய்யும் காவல்துறையினர் மீது பொய் வழக்குகள் போடும் போக்கு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம்.!

Image
  காவல் துறையினர் தங்கள் கடமைகளைச் செய்ததற்காகக் கூட அவர்கள் மீது பொய் வழக்குகள் போடும் போக்கு அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.   போலீசார் மீது பொய்யாக குற்றசாட்டு சுமத்தியதாக சட்டவிரோத குழந்தைகள் காப்பகம் நடத்திய நிர்வாகிகள், நான்கு போலீசாருக்கு ரூ.35,000 வழங்க நீதிபதி உத்தரவு.!

நண்பர் உயிரிழந்த சோகத்தில் பஸ் முன் பாய்ந்து உயிரை விட்ட ஓட்டல் கேஷியர்!

Image
திருப்பூரில் நண்பர் உயிரிழந்த சோகத்தில் 75 வயதான ஓட்டல் கேஷியர் ஓடும் பஸ்ஸில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாநகரில் ஊத்துக்குளி ரோடு மன்னரை பகுதியை சேர்ந்தவர் தம்பி சுப்பிரமணியம் (வயது 72). இவர் மண்ணறையில் ரேவதி தியேட்டர் என்ற தியேட்டர் நடத்தி வந்தார்.  மேலும் அதிமுக கட்சியில் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி உமா மகேஸ்வரி திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவரது நெருங்கிய நண்பரான இன்னொரு சுப்ரமணியம் அதே பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் மரகதம். இவரது இரு மகள்களுக்ககும் திருமணமாகி விட்டது.  சுப்பிரமணியம் திருப்பூர் பிரேமா ஓட்டலில் கேசியராக பணியாற்றி வந்தார்.  ரேவதி தியேட்டர் உரிமையாளர் தம்பி சுப்பிரமணியமும், ஹோட்டல் கேசியர் சுப்பிரமணியமும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்கள். இருவரும் காலையில் வாக்கிங் செல்வது முதல் தங்களது வாழ்வில் நடக்கின்ற நல்ல விஷயம் கெட்ட விஷயம் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வது வழக்கம். சிறு வயது முதல் இணைபிரியாத நண்பர்களாக இருந்திருக்க...

"மத்திய அரசின் மீனவர்களுக்கு எதிரான திட்டங்களையும், சட்டங்களையும் திமுக ஆதரிக்காது" - தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேச்சு.!

Image
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வரவேற்புரையாற்றினார். மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி 800 பேருக்கு 4லட்சம் மதிப்பீல் தையல் மிஷின் சேலை மீனவர்களுக்கான அலுமினிய அண்டா ஆகியவற்றை வழங்கி கனிமொழி எம்.பி பேசுகையில் மறுக்கப்பட்ட கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். உலக நாடுகளோடு போட்டி போடும் வகையில் உருவாக வேண்டும். அந்த கல்வியை கெடுக்காமல் பாத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை மொழியின் மூலம் மருத்தவர்களாக வேண்டிய மாணவ மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வின் மூலம் தடைபடுகிறது. எல்லோருக்கும் உயர் படிப்புகள்...

தூத்துக்குடியில் 30ஆம் தேதி வரை புத்தக திருவிழா - கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் நேற்று முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து பேசிய கனிமொழி எம்பி " புத்தகங்களை தேடித்தேடி சிந்தனையை செதுக்கியவர்கள்தான் சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள்" என பேசினார்.  தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: தூத்துக்குடி புத்தகத் திருவிழா இன்று முதல் 30.11.2022 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும் என்று உங்கள்மீதுள்ள நம்பிக்கையோடு நடத்தப்படுகிறது. உலகில் உள்ள விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான்.  பேரறிஞர் அண்ணா, ஒரு வீட்டில் நூலகம் இல்லையென்றால் அதை வீடாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதில் இருந்தே புத்தகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வேண்டும். தான் படித்த புத்தகத்தை படித்து முடித்தபின்பு அறுவை சிகிச்சை செய...