நிதி நிறுவனத்தில் கடன் மோசடி: குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் ரூ.60 லட்சம் திரும்ப ஒப்படைப்பு - எஸ்பி பாராட்டு!!

தூத்துக்குடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் ரூ. 60 லட்சம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை : சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (56) என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 30.05.2018 தேதியிட்ட மேற்படி காசோலை மூலம் ரூ. 40 லட்சமும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூ. 20 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 60 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுப்பத்திரம் அசல் ஆகியவற்றை அடமானமாக கொடுத்துள்ளனர். இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01....