ஈரோட்டில் திருப்பூர் அதிமுகவினர் தீவிர பிரசாரம்... பொள்ளாச்சி ஜெயராமன், சு.குணசேகரன் முன்னிலையில் ஓட்டு வேட்டை

 ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்  அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுக்கேட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதி கழகம், வார்டு எண் 36, பூத் எண் 158 உட்பட்ட ஜின்னா வீதி, கடை வீதி பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம்  திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி.வி.ஜெயராமன்  தலைமையில்  திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளருமான  சு.குணசேகரன்  முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இந்நிகழ்வில், திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,  மாமன்ற உறுப்பினருமான  கண்ணப்பன்,தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அன்பகம் திருப்பதி,  முருங்கபாளையம் பகுதி கழக செயலாளர் ஏ.எஸ்.கண்ணன்,  வாலிபாளையம் பகுதி கழக செயலாளர் கேசவன்,கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் கே.பி.ஜி.மகேஷ்ராம், நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்.குமார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் தனபால்,  தாமோதரன் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.