Posts

தண்டவாளத்தில் கடந்த பீகார் தொழிலாளர் சடலம் - கொலை செய்யப்பட்டதாக தொழிலாளர்கள் குவிந்தனர்

Image
திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த பீகார் மாநில தொழிலாளர் சடலம் - கொலை செய்யப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர்... திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை  மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் நேற்று இரவு ஒரு மணி அளவில் திருப்பூர் தண்டவாளத்தில் கேரளாவில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக இருந்துள்ளார் . இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இன்று காலை சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே  காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். மேலும் சஞ்சீவ் குமாரின் கைபேசி மற்றும் வாகனங்கள் காணவில்லை எனவும் எனவே அவர் கொலை செய்யப்ப...

கச்சத்தீவு திருவிழாவுக்கு பக்தர்கள் ஆர்வத்துடன் புறப்பட்டு செல்கின்றனர்

Image
கச்சத்தீவு திருவிழாவுக்கு பக்தர்கள் ஆர்வத்துடன் புறப்பட்டு செல்கின்றனர். கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கச்சத்தீவு திருவிழா நடைபெற சூழலில் கடந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா இன்று நடைபெற உள்ளது இதில் இந்தியாவில் இருந்து குறைந்த பக்தர்களே கலந்து கொண்டனர் தற்போது இந்த ஆண்டு இயல்புநிலை திரும்பியதால் இந்தியாவில் இருந்து 60 விசைப்படகு மற்றும் 12 நாட்டு படகு மூலம் 1960 ஆண்களும் 379 பெண்களும் 69 சிறுவர்கள் உள்பட2408 பேர் செல்கின்றனர் இந்த திருவிழா ஆனது இன்று மாலை ஐந்து மணிக்கு கச்சத்தீவில் அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றுடன் துவங்கி அதன்பிறகு சிலுவை பாதை நடைபெறும் நாளை காலை தேர் பவனி உடன் கச்சத்தீவு திருவிழா நிறைவடையும் இதுவரையும் கச்சத்தீவை நோக்கி ஐந்து விசைப்படகுகள் புறப்பட்டு உள்ளன மேலும் இந்தக் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா இலங்கை இருநாட்டு பக்தர்களும் இலங்கை அரசு சார்பாக அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தெப்பத்தில் எழுந்தருளி சேவை

Image
 ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி தெப்ப உற்சவத்தை முன்னிட்டு தினமும் உற்சவர் ஶ்ரீநம்பெருமாளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகளும், மண்டகப்படிகளும், பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா காட்சிகளும் நடந்து வருகின்றன.  விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று (வியாழக்கிழமை) இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் ஶ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இரவு சிறப்பு அலங்காரத்துடன் ஶ்ரீநம்பெருமாள்-தாயார் சமேதமாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியபின் தெப்ப உற்சவம் தொடங்கியது. மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. மூன்றாவது சுற்றின்போது பெருமாள் தாயார் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் எழுந்தருளினார், அங்கு அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டபின், மீண்டும் ஶ்ரீநம்பெருமாள்- தாயார் சமேதமாக தெப்பத்தில் ஏறி சுற்றை நிறைவுசெய்தபின் கரை ஏறினார், அதைத்தொடர்ந்து உபயக்காரர...

தேர்தல் ஆணையர் நியமனம் - வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி.!!

Image
  இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோரை இனிமேல் பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுதான் நியமிக்கும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது இந்திய தேர்தல் நடைமுறைகளில் மிகப் பெரிய சீர்திருத்தமாக பார்க்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில் இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட கோரி, வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், கோபால் சங்கர் நாராயணன் உள்ளிட்ட பலரது சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக 7 நாட்களுக்கு மேல் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையர்களுக்கான பதவியை நியாயமான சட்டத்தின்படி ஆறு ஆண்டுகள் என இருக்கிறது. ஆனால் 6 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அரசு வேண்டும் என்றே தேர்ந்தெடுப்பது ஏன்? இப்படி இருந்தால் இந்த தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு சுதந்திரமான ஒரு அமைப்பாக எப்படி இயங்க முடிய...

சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து - தீ விபத்து தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் மனு.!

Image
  மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக அவசர வழக்காக விசாரிக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி திபேன் மனு தாக்கல் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி தெரிவித்துள்ளார் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் டிசம்பர் 5ஆம் தேதி புதிதாக திறக்கப்பட்டது. பத்து மாடிகளுடன் கூடிய இந்த சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக வளாகத்தில் சுமார் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி உள்ளது.  கீழ் தளத்தில் நகைக்கடையும், மேல் தளங்களில் ஜவுளி கடையும், அதற்கு மேல் உணவகங்களும் உள்ளன. மேலும், இங்கு வீட்டுக்கு தேவையான உபயோக பொருள்கள், உடைகள் என அனைத்தும் ஒவ்வொரு தளத்திலும் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பத்தாவது தளத்தில் இயங்கி வரும் உணவகத்தில் உள்ள சமையல் கூடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதனையடுத்து கடையில் இருந்த ஊழி...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Image
தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாநகர காவல்துறை, அன்புடன் திருப்பூர் அறக்கட்டளை மற்றும் இணைந்த கரங்கள் அறக்கட்டளை சார்பாக 34வது சாலை பாதுகாப்பு வாரம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் வனிதா தொடங்கி வைத்தார். திருப்பூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் பிச்சையா, ரத்தினகுமார் மற்றும் சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அன்புடன் திருப்பூர் அறக்கட்டளையின் தலைவர் மோகன் கே.கார்த்திக், இணைந்த கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் துரை ஆகியோரது ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திரா சுந்தரம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். மாநகராட்சி அலுவலக சிக்னல் அருகில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள், அங்கி அணிந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. வாகனங்களின் முகப்பு விளக்கில் ஒளியை மங்கச் செய்யும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. முறையாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓ...

சக்ராசனம், கூர்மாசனம் செய்து யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் அசத்திய மாணவர்கள்.

Image
திருப்பூர் மாவட்ட யோகாசன அசோசியேசன் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் கிரேட்டர் ஆகியோர் இணைந்து ஓபன் யோகா சாம்பியன்ஷிப் போட்டி-2023 கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில்  நடைபெற்றது.  பல்வேறு பிரிவின் கீழ் நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சக்ராசனம், பூமியாசனம், ஹாலாசனம், புஜ்ஜபீடாசனம், யோகநித்யா, கூர்னசரபாசனம், பத்மசிரசாசனம், பத்மபக்தாசனம் செய்து அசத்தினர், மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் சிறப்பாக யோகாசனம் செய்து தேர்வாகும் மாணவர்கள் தாய்லாந்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.