Posts

ஒரு கையில் ஸ்டியரிங்... இன்னொரு கையில் கியர் ராடு.. பதறாமல் பஸ் ஓட்டும் கோயம்புத்தூர் பொண்ணு..

Image
சோமனூர் - காந்திபுரம் வழித் தடத்தில் ஆண்களுக்கு நிகராக பஸ் ஓட்டும் இளம்பெண் ஷர்மிளா, அந்த பகுதி மக்களிடையே சிங்கப்பெண்ணாக மிளிர்கிறார். கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்த மகேஷ் - ஹேமா தம்பதியரின் மகள் ஷர்மிளா. 24 வயதான இந்த இளம்பெண் தான் கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சோமனூருக்கு தனியார் பஸ் ஒன்றை அசால்டாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகிறார். தந்தையின் டிரைவர் பணியால் ஈர்க்கப்பட்டு பஸ் ஓட்டுவதை லட்சியமாக கொண்டு பஸ் ஓட்டுகிறார். ஷர்மிளா கியர் ராடு பிடித்து, ஸ்டியரிங் சுழற்றும் லாவகம் பார்த்து, பஸ்ஸில் வரும் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அசந்து தான் போகிறார்களாம்.  கோவையின் முதல் பெண் பஸ் டிரைவராக கலக்கும் ஷர்மிளா வின் பஸ்ஸில் ஏறி செல்ல தனி மகளிர் கூட்டமே இருக்கிறது என்கிறார்கள். "டாடி டிரைவர் என்பதால் எனக்கு ஆர்வம் அதிகம். சிலிண்டர் கொண்டு செல்லும் வாகனம் ஓட்டினேன். அதன் பின்னர் ஆட்டோ ஓட்டினேன். அப்புறம் கனரக வாகன பயிற்சி பெற்று வேலைக்காக காத்திருந்தேன். மகளிர் தினத்தன்று வேலைக்காக காத்திருக்கும் என்னை பற்றிய தகவல்கள் செய்தியாளர்கள் மூலமாக வெளிவந்தது. அதனை தொடர்ந்து சோமனூர்...

சென்னை -கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்... சேலத்தில் வரவேற்பு

Image
 தமிழ்நாட்டில் சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயிலை வருகிற 8 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. காலை 5.40 மணிக்கு சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கிளம்பிய வந்தே பாரத் ரயில் காலை 9.15 மணிக்கு சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தினை வந்தடைந்தது. சேலம் ஜங்சனில் 4 வது பிளாட்பாரம் வந்த இந்த ரயிலை கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சிங் தலைமையிலான ரயில்வே அதிகாரிகள் இந்த ரயிலை வரவேற்றனர்.  முழுமையான சொகுசு ரயிலாக இயக்கப்படுகிற இந்த ரயில் தான் தமிழ்நாட்டிலேயே இயக்கப்படுகின்ற அதிவேக ரயிலாக இருக்கும்.  -கண்ணன்

திருப்பூரில் பள்ளி வாகனம் மோதி பெண் பலி:பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம்

Image
 பள்ளி வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில்  பிணத்தை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரப்பாளைளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவர் இன்று காலையில் பள்ளியில் குழந்தையை விடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் வந்தார்.  அப்போது திருப்பூர் கூலிபாளையம் நால் ரோட்டில் இருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் உள்ள விகாஸ் வித்யாலயா பள்ளி அருகே அந்த பள்ளியின் வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி போலீசார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது விபத்தில் பலியான ராதாவின் உறவினர்கள் அங்கு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் உரிய நியாயம் வேண்டும் என்றும் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், சடலத்தை அப்புறப்படுத்த விடாமல் போலீசாரை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு... திருப்பூரில் முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் கொண்டாட்டம்

Image
 அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டியும், பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டியும் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, இதை தொடர்ந்து பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து  திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன் தலைமையில் அதிமுகவினர் திரண்டு திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடினார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள் பூலுபபட்டி பாலு, சங்கீதா சந்திரசேகர், பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கேசவன், ஏ.எஸ்.கண்ணன...

'பல் பிடுங்கி பல்பீர் சிங்' விவகாரம் - 12 பேரிடம் சப்-கலெக்டர் விசாரணை - பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவு.!

Image
நெல்லை மாவட்டம் அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் அவர் ஈடுபடுவதாக சிலர் புகார் கூறியதையடுத்து, அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்பட அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் காட்சிகள் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை விசாரிக்க, சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது.  அதன்படி பாதிக்கப்பட்ட லெட்சுமி சங்கர், வெங்கடேஷ், சூர்யா உள்ளிட்ட 3 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அந்தந்த கிராம வி.ஏ.ஓ.க்களுடன் நேரில் ஆஜராக சப்-கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். நேற்று பகல் முழுவதும் யாரும் வராமல் இருந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி பகுதியை ...

குறைந்த செலவில் கேதர்நாத் பயணம்!

Image
 தமிழ்நாட்டில் இருந்து 3000 கி.மீ., தூர வாகன பயணம்., இமய மலையில் 19 கி.மீ., தூர நடைப்பயணம்., 12 ஆயிரம் அடி உயரத்தில் உடலை உறையச் செய்யும் மைனஸ் குளிர்.,  இத்தணை சிரமங்களை கடந்தும் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுத்துச் சென்று தரிசிக்கும்  சிவன் கோவில் தான் கேதர்நாத் கோவில்.. உலகம் முழுவதும் இருக்கும் இந்து சமயத்தினர் இந்த கோவிலுக்கு புனிதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.  உத்தரகாண்ட் மாநிலத்தில், சிவாலிக் மலைத்தொடரில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருக்குதுங்க கேதர்நாத் கோவில்.,  கேதர்நாத் கோவில் பஞ்சபாண்டவர்கள் காலத்தில் உருவான கோவில். இந்த கோவிலில் கேதாரீஸ்வரர் முக்கோண வடிவிலான லிங்கமா இருந்து பக்தர்களுக்கு அருள் கொடுக்கிறார்ங்க..,  இமயமலையில் மந்தாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில். சம்பந்தராலும் சுந்தரராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் இந்த கோவிலும் ஒன்னுங்க. இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் சொல்றாங்க., ஆதிசங்கரர் காலத்துல கோவில் புனரமைக்கப்பட்டிருக்கு.,...

கச்சத்தீவில் புத்தவிகாரம் கட்டியதாக பாதிரியார் புகார்... கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்த புத்த பிட்சுகள்... என்னப்பா நடக்குது அங்கே?

Image
கச்சத்தீவில் புத்த விகாரங்களை இலங்கை அரசு கட்டியுள்ளதாக கூறியுள்ள  இலங்கை நெடுந்தீவு பகுதியை சார்ந்த பாதிரியார் வசந்தன்,  இதற்கான புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.  இந்த நிலையில் கச்சத்தீவு திருவிழாவிற்கு புத்த பிட்சுகள் வந்திருந்த காரணம் சமூக நல்லிணக்கம் இல்லையா? வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?  என்ற கேள்வி எழுந்துள்ளது. மார்ச் மாதம் 3,4 தேதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவினை இலங்கை அரசு நடத்தியது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்தும் சுமார் 10 ஆயிரம் பேர் திருப்பயணிகளாக கலந்து கொண்டனர்.  இந்த விழாவுக்கு வந்திருந்த இலங்கை நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பாதிரியார் வசந்தன், ‘கச்சத்தீவில் இரண்டு புத்த விகாரங்கள் கட்டப்பட்டு இருப்பதாக பிபிசி தொலைக்காட்சியிடம் தெரிவித்து இருந்தார். அந்த விகாரங்கள் பனை ஓலை தட்டியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது என்றும், அந்த மறைப்புக்கு கடற்படையினர் காவல் நிறுத்தப்பட்டு இருந்தததுடன், அந்த இடத்துக்கு பக்கத்தில் கூடயாரும் அந்த பகுதியில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறி இருந்தார்.  5 அடி உயர...