கோலாகலமாக நடந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருமண கோலத்தில் மணமேடையில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருக வணங்கினர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் கடந்த 30ம் தேதியும், அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் மீனாட்சியம்மன் திக் விஜயம் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 5 டன் வண்ண மலர்களால் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வடக்கு ஆடி- மேல ஆடி வீதி சந்திப்பில் உள்ள அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்...