குட்டிப்பையன் கார் ஓட்டியதால் வந்த வினை... 11 வயது சிறுமி பரிதாப பலி

 15 வயது சிறுவன் தாறுமாறாக கார் ஓட்டி சாலையில் கவிழ்ந்து விபத்து சாலையோரம் நடந்து சென்ற 11 வயது சிறுமி பலியானார்.

தேனி மாவட்டம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் 48 இவரது மனைவி கோமதி 40 இவர்களுக்கு மூன்று மகள் ஒரு மகன் உள்ளனர் இவர் திருப்பூர், கோவில் வழி அருகே உள்ள கந்தசாமி தோட்டம் எனும் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

வீட்டின் அருகில் தாராபுரம் முக்கிய சாலையில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். மே 1 ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து உணவகத்திற்கு செல்ல ஆதிநாரயணனின் 3 வது மகள் தீபிகா(11) நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் தாறுமாறாக ஓடி சிறுமியின் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சிறுமி மீது மோதி தலை குப்புற கவிழந்தது. 


இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற சிறுவன் அங்கிருந்து தப்பியதாக கூறப்பட்ட நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நல்லூர் போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரின் பதிவு எண் கொண்டு விசாரித்ததில் ஈஸ்வரன் என்பவரது கார் என தெரியவந்தது. மேலும் அவரது 15 வயது மகன் (ரித்திகேஷ்வரன்) காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி