Posts

சேலம் நீதிமன்றத்தில் நீதி பதியின் முன் சட்டையை கழற்றிய சிறைக்கைதி

Image
சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் விசாரணை கைதிகள் நீதிமன்றத்திற்கு செல்வதற்காக சிறை அதிகாரிகள் தயார்படுத்துவார்கள். எந்த கைதி நீதிமன்றம் செல்ல வேண்டுமோ, அவர்களை சிறையில் இருக்கும் மைக் மூலம் அழைப்பார்கள். இவ்வாறு அழைக்கப்படும் கைதி, உடனடியாக வர வேண்டும். அவர்களை அழைத்துச் செல்ல தயாராக இருக்கும் போலீசாரிடம் ஒப்படைப்பார்கள்.சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த கைதிகளை அழைத்துச் செல்ல ஆயுதப்படை போலீசார் தயாராக இருப்பார்கள். இதன்படி காலை திருட்டு மற்றும் அடிதடி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த விசாரணை கைதியை சிறை அதிகாரிகள் மைக் மூலம் அழைத்தனர். ஆனால் அவர் 2 மணி நேரமாகியும் வரவில்லை.இதையடுத்து அவரது அறைக்கு சென்ற வார்டன்கள், மைக்கில் அழைத்தும் ஏன் வரவில்லை என கேட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அப்போது அந்த கைதி, சிறை அதிகாரிகள் தன்னை அடித்துவிட்டதாக சட்டையை கழட்டி மாஜிஸ்திரேட்டிடம் காட்டினார்.இதையடுத்து உ...

பவானிசாகர் அருகே, ரூபாய் 46 இலட்சம் மதிப்பில், வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை. எம்.எல்.ஏ. பண்ணாரி துவக்கி வைத்தார்.

Image
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி. பெரிய கள்ளிப்பட்டி, பனையம்பள்ளி ஊராட்சி பகுதி களில், 46 இலட்சம் மதிப்பில் ஆன, வளர்ச்சி பணிகளுக்கான பூமி பூஜை பவானிசாகர் எம்.எல்.ஏ அ.பண்ணாரி தலைமையில் நடைபெற்றது.2022 - 2023 ஆம் ஆண்டுக்கான, பவானி சாகர் சட்டமன்ற தொகுதி, மேம்பாடு வளர்ச்சி நிதியிலிருந்து, பவானி சாகர் ஊராட்சி ஒன்றியம், பெரிய கள்ளிப்பட்டி ஊராட்சி பெரிய கள்ளிப் பட்டி காலனி முதல் கருப்பராயன் கோயில் வரை கான்கிரீட் தடுப்பு சுவர் சுமார் ரூபாய் 22 லட்சம் மதிப் பீட்டிலும், பெரிய கள்ளிப்பட்டி மெயின்  ரோடு முதல் டீக்கடை வரை, ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டிலும், பனையம்பள்ளி ஊராட்சி, அம்மா நகர் பகுதியில், தார்சாலை சுமார் ரூபாய் 18.14 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள,பூமி பூஜை செய்து, கட்டுமான பணி யினை,பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரு மான,அ.பண்ணாரி,பி.ஏ.எம்.எல்.ஏ.தலைமை தாங்கி. துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,பெரியகள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துரை, அதிமுக பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர், வி.ஏ..பழனிச் சாமி, மாவட்ட ஊராட்சி குழ...

சாய் சுதர்ஷனின் அதிரடியால் வெற்றி வாகை சூடியது "லைகா கோவை கிங்ஸ்"

Image
 டி.என்.பி.எல் 2023 சீஸனில் தங்களின் முதல் தோல்வியைப் பதிவு செய்தது 'திண்டுக்கல் டிராகன்ஸ்'ஸ்ரீ ராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சாய் சுதர்ஷனின் அபாரமான ஆட்டத்தால் லைகா கோவை கிங்ஸ் 59 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் நான்காவது வெற்றியைப் பதிவு செய்தனர்.முன்னதாக, இந்த சீஸனில் இதுவரை தோல்வியே காணாத திண்டுக்கல் டிராகன்ஸ் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸை எதிர்கொள்ள சேலத்தில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஓப்பனர்கள் எஸ் சுஜய் (32 ரன்கள் 17 பந்துகள்) மற்றும் சரவண குமார் (29 ரன்கள் 17 பந்துகள்) சிறப்பாக விளையாடி திண்டுக்கல் டிராகன்ஸை ஆரம்பத்திலேயே தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.அதன்பின்னர், 4வது விக்கெட்டிற்கு அந்த அணியின் சாய் சுதர்ஷன் மற்றும் யூ முகிலேஷ் இணைந்து 85 ரன்கள் சேர்க்க லைகா கோவை கிங்ஸின் ரன் கணக்கு மளமளவென உயர்ந்தது. ...

சத்தியமங்கலத்தில் கலைஞர் நூற்றாண்டையொட்டி, சிறப்பு பன்நோக்கு மருத்துவ முகாம்.

Image
 கலைஞர் நூற்றாண்டையொட்டி, தமிழகம் முழுவதும் 100 மையங் களில், பன் நோக்கு சிறப்பு முகாம் நடத்திட ,தமிழக அரசு உத்தரவிட்ட தின்பேரில்,ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழா சிறப்பு பன் நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமினை, கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யா பிரியதர் ஷினி தலைமையில், சத்தியமங்க லம் நகர மன்ற தலைவி ஜானகி ராமசாமி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இளங்கோ, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தங்க சித்ரா, உக்கரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. பிரபாவதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, துவக்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவி ஜானகிராமசாமி ,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, அஙகன்வாடி பணியாளர்கள் ஊட்டச் சத்து குறித்து அமைத்திருந்த . அரங்கை பார்வையிட்டனர்.இந்த மருத்துவ முகாமில் பொது நல மருத் துவம் ,குழந்தைகள் நல மருத் துவம், மகப்பேறு நல மருத்துவம்,, எலும்பு சகிச்சை மருத்துவம், அறுவை சிகிச் சை மருத்துவம்...

அழிவின் விளிம்பில் கும்மியாட்ட கலை.

Image
 கோவை மாவட்டம், மேட்டுப் பாளை யம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வெள்ளிக் குப்பம்பாளையத்தில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ள கும்மியாட்டக் கலையை தேர்வு செய்து அதற்கு புத்துயிர் ஊட்டும் வகையில், கிராமப் பகுதி யில், எட்டு வயது சிறுவர் சிறுமியர் முதல் 60 வயது ஆண் பெண் உள் ளிட்ட முதியோர் வரை கும்மியாட்ட கலை குறித்து எடுத்துரைத்து பயிற்சிகள் அளித்தும் கோவில் விசேஷங்கள் சுபமுகூர்த்த தின ங்கள் உள்ளிட்ட காலங்களில் சீருடைகளோடு அந்தந்த பகுதிகளுக்கு குழுவினருடன் சென்று அரங்கேற்றி நிகழ்ச்சி களையும் நடத்தி வருகின்றனர் இது போன்ற கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகளில் தெய்வீக பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் வள்ளி கும்மியாட்டம் ஆகியவற்றை நடத்தி பல தரப்பினர்களின் வரவேற் பை பெற்று வருகின்றனர். எந்தவித இசைக் கருவிகளையும் பயன் படுத்தாமல் சலங்கை ஒலி மூலமாக இதுபோன்ற கிராமிய நாட்டுப்புறக் கலை கும்மி பாடல்கள் மூலம் எளிய வகையில் நிகழ்ச்சி நடததுகின்றனர், வருங்கால தலை முறைகள் செல்போன், தொலைக் காட்சி திரைப்படங்கள் போன்றவற் றின் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்பிளை விளக்கும்  வகையில், இளம் வய தினரை குறித்து த...

சத்தியமங்கலத்தில், நீதிமன்ற வளாகம் கட்ட, தமிழக அரசை வலியுறுத்துவோம். முன்னாள் அமைச்சர். கே.ஏ.செங்கோட்டையன்.

Image
ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத் தில், வெற்றி நர்சிங் கல்லூரி மற் றும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் சார்பில்,  இலவச சட்ட பயி ற்சி பட்டறை நடைபெற்றது. இதை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர், கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று இங்கு நடத்தப்படும் சட்ட பயிற்சி முகாம் ஏழை, எளியவர்கள், மலைவாழ் மக்கள், நீதிமன்றத்தில் வழக்காட , சட்டவிதிகளை அறிந்து கொள்ள உறுதுணையாய் அமையும். என்றும், அரசு வளர்ச்சி திட்ட துவக்க விழா நிகழ்ச்சிகளில்.மக்கள் பிரதி நிதிகளை தவிர்த்து, திமுக கட்சி நிர்வாகிகள் விழாக்களை துவக்கி வைப்பதும். பூமி பூஜை நடத்துவதும், தேவையுள்ள பகுதிகளில் திட்டங் களை துவக்காமல்,தேவையற்ற பகுதிகளில் பணிகளை துவக்குவது குறித்து கண்டனம் தெரிவித்து, இதை  தவிர்க்க கோரி, மாவட்ட ஆட்சி யரிடம் புகார் தெரிவித்தோம். மேலும், நீதிமன்ற வளாகம் கட்டுவது தொடர்பாக, ஏற்கெனவே சட்டப் பேர வையில் பேசியுள்ளோம். இடம்தேர்வு செய்ய, சட்டமன்ற உறுப்பினர் பண் ணாரி நிலத்தை அடையாளம் காட்டி யுள்ளார். நீதிமன்ற வளாகம் கட்ட ,  ஆயத்தப் பண...

திருநங்கைகளுக்கு சூலூர் மகளிர் காவல் ஆய்வாளர் அறிவுரை

Image
கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டி சப்டிவிசன் சூலூர் மகளிர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் சூலூர் சுற்றுவட்டார திருநங்கைகளுக்கு அறிவுரைகள் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஆய்வாளர் சுமதி அவர்கள் கூறுகையில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி  வசூல் செய்வது சூலூர்ஏரோ சிந்தாமணிபுதூர் சிக்னல் மற்றும் காடாம்பாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நிற்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் மேலும் தாங்கள் படிப்புக்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்புகள் கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு தரலாம் மேலும் எங்களால் முடிந்த அளவு வேலை வாய்ப்புகள் பெற்று தர முயற்சி செய்கிறோம் எனவே நீங்கள் அனைவரும் காவல்துறையின் அறிவுரையை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று காவல் ஆய்வாளர் சுமதி அறிவுரை வழங்கினார் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்த அறிவுரையை முழு மனதோடு ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்