திருநங்கைகளுக்கு சூலூர் மகளிர் காவல் ஆய்வாளர் அறிவுரை

கோவை மாவட்டம் கருமத்தாம்பட்டி சப்டிவிசன் சூலூர் மகளிர் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் சூலூர் சுற்றுவட்டார திருநங்கைகளுக்கு அறிவுரைகள் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் ஆய்வாளர் சுமதி அவர்கள் கூறுகையில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி  வசூல் செய்வது சூலூர்ஏரோ சிந்தாமணிபுதூர் சிக்னல் மற்றும் காடாம்பாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் நிற்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் மேலும் தாங்கள் படிப்புக்கு தகுந்தாற்போல் வேலை வாய்ப்புகள் கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு தரலாம் மேலும் எங்களால் முடிந்த அளவு வேலை வாய்ப்புகள் பெற்று தர முயற்சி செய்கிறோம் எனவே நீங்கள் அனைவரும் காவல்துறையின் அறிவுரையை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என்று காவல் ஆய்வாளர் சுமதி அறிவுரை வழங்கினார் கூட்டத்தில் கலந்து கொண்ட இந்த அறிவுரையை முழு மனதோடு ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி