Posts

அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாத்திட, சத்தியமங்கலத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சிஐடியூ சங்க 34 வது ஈரோடு மாவட்ட மாநாடு.

Image
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியூ) ஈரோடு,34வது ஈரோடு மாவ ட்ட மாநாடு,சத்தியமங்கலத்தில் சரவ ணன் மற்றும் கணேசன் நினைவரங் கில் (ஆனைக்கொம்பு அரங்கம்) சங்க கொடியேற்றத்துடன்துவங்கியது.முன் னதாக சங்க கொடியை, சங்க உதவித் தலைவர்என்.தேவராஜ்ஏற்றிவைத்து, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. சத்தி கிளைச் செயலாளர் கே.குமரேசன் வரவேற்புரை நிகழ்த்தி னார். அரசு போக்குவரத்து கழக சிஐடியூ சங்க மண்டலத் தலைவர் கே. மாரப்பன் மாநாட்டு தலைமையுரை நிகழ்த்தினார். அரசு போக்குவரத்து கழகத்தை பாதுகாக்கவும், காண்ட்ரா க்ட் முறையை ஒழித்திடவும், அனைவ ரும் பென்சன் பெற்றிடவும்,ஓய்வுபெற் றோர் நலன் காத்திடவும், அதிகாரி களின் அராஜகத்திற்கு முற்றுபுள்ளி வைத்திடவும், இந்திய தேசத்தை பாது காத்திடவும் நடைபெறும்அரசு போக்கு வரத்து ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) 34வது ஈரோடு மாவட்ட மாநாட்டினை, சங்கத்தின் பண்முகத் தலைவர், என். முருகையா, துவக்கிவைத்து துவக்க உரையாற்றினார்.  இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் 100-க்கும் மேற்பட்டபோக்கு வரத்து தொழிலாளர்களின் பிரதிநிதி கள்.பிரதிநிதிகள்மாநாட்டில் பங்கேற் று உள்ளனர். நாளை சகோதார சங...

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!

Image
 தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது! இன்று மாலை 4.45 மணிக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இறுதி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்!

பட்டா மாறுதலுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம்- விஏஓ கைது!

Image
பட்டா மாறுதலுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம்- விஏஓ கைது! மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா போத்தம்பட்டியில் பட்டா மாறுதலுக்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ ரம்யா லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.  

அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.!

Image
 அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.12.2023) தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிருவாக ஆணையர் /கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்....

கனமழை எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சியா் அறிவுரை!

Image
 கனமழை எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சியா் அறிவுரை! தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிறு (டிச.30, 31) ஆகிய இரு நாள்களும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீா்நிலைகளில் அதிக நீா் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  நீா்நிலைகளுக்குச் செல்லக் கூடாது. கால்நடைகள் நீா்நிலைகளில் இறங்காதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைத் தொடந்து கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், மோட்டாா் பம்புகள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்கவும், நிவாரண முகாம்களை தயாா்ப்படுத்தி, தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத்...

தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி ரூ.6ஆயிரம் வழங்கும் பணி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!

Image
 தமிழ்நாடு அரசு வழங்கும் வெள்ள நிவாரண நிதி ரூ.6ஆயிரம் வழங்கும் பணி: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்! தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால்  பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி 6ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசியும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரணத் தொகையாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மாநகராட்சி டூ.வி.புரம் 5ஆவது தெருவில் உள்ள நியாயவிலைக் கடையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உர...

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்.!

Image
 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்.! கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு   திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதேபோல் புத்தாண்டு அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபு...