கனமழை எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சியா் அறிவுரை!


 கனமழை எச்சரிக்கை: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆட்சியா் அறிவுரை!


தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளாா்.


இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிறு (டிச.30, 31) ஆகிய இரு நாள்களும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆறு மற்றும் நீா்நிலைகளில் அதிக நீா் உள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 


நீா்நிலைகளுக்குச் செல்லக் கூடாது. கால்நடைகள் நீா்நிலைகளில் இறங்காதவாறு பாா்த்துக் கொள்ள வேண்டும். மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளைத் தொடந்து கண்காணித்து மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் கருவிகள், மோட்டாா் பம்புகள் ஆகியவற்றை தயாா் நிலையில் வைத்திருக்கவும், நிவாரண முகாம்களை தயாா்ப்படுத்தி, தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்