Posts

ரயில்வே மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் ஆடல்பாடல் குத்துப்பாட்டு ஆவேசமடைந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தடுத்து நிறுத்தினார்

Image
*ரயில்வே மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் ஆடல்பாடல் குத்துப்பாட்டு! ஆவேசமடைந்த  சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தடுத்து நிறுத்தினார்!*        மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாப்படுகை, நீடூர் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா 26-2-2024 இன்று  காலை  பிரதமர் பங்கேற்று காணொலி வாயிலாக  அடிக்கல் நாட்டும் விழாவின் துவக்கத்தில் கலாச்சாரக் கலை நிகழ்ச்சிகள்  நடைபெறும்  என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், குத்துப் பாடல்களுடன் ஆடல் பாடல் நிகழ்வு நடைபெற்றதை பார்த்து மிகவும் கோபமும் வருத்தமும் ஆவேசமும் அடைந்து மயிலாடுதுறை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நேராக  மேடைக்குச் சென்று உடனடியாக ஆடல் பாடலை நிறுத்துமாறும், அரசு விழாவிற்கு ஏற்ற பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் கூறி தடுத்து நிறுத்தினார். விழாவிற்கு வந்திருந்த அத்தனை பேரும் இந்நிகழ்ச்சிகளை பார்த்து மனம் நொந்து  பாதிக்கப்பட்டு அமர்ந்திருந்த நிலையில், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி நிறுத்தியதை அங்கிருந்...

தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு

Image
தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு ஒசூரில் நடந்தது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் விஜயகுமார் மாநில இணை பொதுச் செயலாளர் மற்றும் மாவட்டத் தலைவர் கங்காதரன்  கோட்டசெயலாளர் நரசிம்மன்   மஞ்சுசுவாமி கோட்ட தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்: 1) திருச்சியில் மார்ச் 2 அன்று நடக்கும் மாநில பொதுக்குழு கூட்டத்தில்  500க்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 2) ராயக்கோட்டை சாலையில் உள்ள சாலையோர மாட்டிறைச்சி கடைகள் அகற்றக்கோரி மகளிர் அணி தலைமையில் ஆர்ப்பாட்டம். 3) ஐந்தாயிரம் தம்பதிகளுக்கு கலந்து கொள்ளும் சத்தியநாராயணன் பூஜை வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். 4) ஒசூர் மாநகர  நகர பகுதிகளில்  புதிய நிர்வாகிகள் அறிவிப்பு 5) மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமாச்சாரி  இறந்ததற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 6)  கிருஷ்ணகிரியை தலைமை இடமாகக் கொண்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மேற்கு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டு மாவட்டந...

தமிழக வெற்றிக் கழகம் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக 66-வது இடமாக ரொட்டி முட்டை பால் திட்டம் மற்றும் ஐந்தாவது பயிலகம் துவங்கம்

Image
தமிழக வெற்றிக் கழகம்  கோவை தெற்கு மாவட்டம் சார்பாக 66 வது இடமாக  ரொட்டி முட்டை பால் திட்டம் மற்றும் ஐந்தாவது பயிலகம் துவங்கப்பட்டது.. தமிழக வெற்றி கழகம்  கோவை தெற்கு மாவட்டம் சார்பாக தொடர்ந்து பொள்ளாச்சி கிணத்துகடவு வால்பாறை என பல்வேறு இடங்களில் கல்வி உதவி தொகை மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, தளபதி பயிலகம், தளபதி விலையில்லா ரொட்டி முட்டை பால் திட்டம் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில்  கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் புரம் பகுதியில் தொடந்து, 66 வது இடமாக  ரொட்டி முட்டை பால் திட்டம் மற்றும் ஐந்தாவது பயிலகம் துவங்கப்பட்டது...இதற்கான துவக்க விழாவில்,கோவை தெற்கு மாவட்ட தலைவர் கோவை K.விக்னேஷ்  தலைமை தாங்கினார்... கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் S.பாபு  முன்னிலை வகித்தார்.. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக. மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன் , மாவட்ட நிர்வாகிகள் உமாபதி , பாலா   இளைஞரணி நிர்வாகிகள் மாரிராஜ் ,செந்தில் குமார் , சரவணன் , ரோஹித் , வினோத் ,சபரி , ஷெரிப் , அப்துல்லா உள்ள...

கேள்வித்தாள் கசிவு காரணம்.!? -ISC 12 ம் வகுப்பு வேதியியல் தேர்வு திடீர் ஒத்திவைப்பு - தேர்வெழுத சென்ற தூத்துக்குடி விகாசா பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்.!

Image
  கேள்வித்தாள் கசிவு காரணம்.!? -ISC 12 ம் வகுப்பு வேதியியல் தேர்வு திடீர் ஒத்திவைப்பு - தேர்வெழுத சென்ற தூத்துக்குடி விகாசா பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்.! இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில், திங்கள்கிழமை (பிப்ரவரி 26) திட்டமிடப்பட்ட ISC வேதியியல் தாள் 1 (தியரி) தேர்வை, திட்டமிடப்பட்ட நேரத்திற்கு மதியம் 2 மணிக்கு முன்னதாக, "எதிர்பாராத சூழ்நிலைகளை" காரணம் காட்டி ஒத்திவைத்துள்ளது. தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 21) மதியம் 2 மணிக்கு நடைபெறும் என கவுன்சில் தெரிவித்துள்ளது.  பேரவையின் துணைச் செயலாளர் சங்கீதா பாட்டியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நடவடிக்கைக்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இன்று தூத்துக்குடி விகாசா பள்ளிக்கு தேர்வெழுத சென்ற 12 ம் வகுப்பு மாணவர்கள் உட்பட, இந்தியா முழுவதும் உள்ள  ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏன் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து கவுன்சில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். இது கேள்வித்தாள் கசிவு காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ள...

*முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்நம்பியூர் ஒன்றியம் கூட கரை ஊராட்சியில்நடைபெற்றது நடைபெற்றதுமுன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்புரை *

Image
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் கூடக்கரை ஊராட்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சென்னை மணி (எ) ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது.  கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி(எ) சுப்பிரமணியம், கூடக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்புரை  ஆற்றினார், இதில் முன்னாள் எம்.பி.சத்தியபாமா, மாவட்ட கவுன்சிலர் கெளசல்யா தேவி,யூனியன் சேர்மன்கள் சுப்பிரமணியம், மெளதீஸ்வரன், பேருராட்சி செயலாளர்கள் சேரன் சரவணன், கருப்பண கவுண்டர், மேற்கு மாவட்ட தகவல் தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் ஏவிஎம் செந்தில் (எ) கோடிஸ்வரன்,கோபிசெட்டிபாளையம் ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் கலிங்கியம் அருள் ராம்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி, பழனிச்சாமி, மகுடேஸ்வரன், செந்தாமரை, தேவி சந்திரசேகர், கூடக்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தகுமார்,யூனியன் கவுன்சிலர்கள் கோசனம் ரங்கசாமி, செல்வி சிதம்பரம், வக்கில் கங்கதாரன், டெலிபோன் செல்வம்,அருண் மஹால் பிரபு ஜேச...

திருப்பூர் ஏ.வி.பி., கல்லூரியில் 1430 மாணவிகளுக்கு பட்டம்... பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் வழங்கினார்.

Image
திருப்பூர் ஏ.வி.பி., கல்லூரியில் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழாக்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது.  திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழாக்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த விழாக்களில் மொத்தமாக 1430 மாணவிகள் பட்டம் பெற்றனர்.  கல்லூரியின் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழாவில் கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் வி.கலைச்செல்வி கலந்து கொண்டு 900 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் 27 மாணவிகள் பல்கலைக்கழக தரப்பட்டியலில் இடம் பெற்றமைக்கான பதக்கங்களை வழங்கி பாராட்டினார். மூன்றாமாண்டு பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக் கழக பதிவாளர் ரூபா குணசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 530 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். மேலும் பல்கலைக்கழக தரப்பட்டியலில் இடம்பெற்ற 16 மாணவிகளுக்கு பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார். இந்த இரண்டு பட்டமளிப்பு விழாக்களுக்கும் கல்லூரி தலைவர் ஏ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கல்லூ...

தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம். கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்" - தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Image
 "தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம். கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள்" - தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் நிகழ்ச்சியில், மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். தூத்துக்குடி சூசை பாண்டியாபுரத்தில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மற்றும் நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,21,815 பயனாளிகளுக்கு ரூ.423.95 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் குற...